ஆர்சிபியா? சிஎஸ்கேவா? யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்? Stats சொல்வது என்ன? ஒரு அலசல்!

அப்பப்பா ஒரு அணியை தவிர மீதமிருக்கும் 9 அணிகளுக்கும் இறுதிவரை ஹார்ட் பீட் எகிறக்கூடிய அழுத்தம் இருக்கிறது என்றால், அப்படிதான் நடப்பு ஐபிஎல் தொடர் தன்னை வடிவமைத்து கொண்டுள்ளது.
csk vs rcb
csk vs rcbx

கொல்கத்தா ஒரு அணியை தவிர ராஜஸ்தான் உட்பட அனைத்து 9 அணிகளும் மீதமுள்ள போட்டிகளில் வாழ்வா-சாவா என போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 8 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த ஆர்சிபி அணி, தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு சென்று மீண்டும் கம்பேக் கொடுத்து அபாரமாக விளையாடிவருகிறது. அதேபோல ஒரு முழுமையான அணியாக இருந்த சிஎஸ்கே அணி, கடைசி போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்லமுடியும் என்ற இக்கட்டான நிலைக்கு சென்றுள்ளது.

திடீரென ரெக்கார்ட் ரன்சேஸ் செய்த பஞ்சாப் அணி தொடரிலிருந்தே வெளியேறியுள்ளது. அதேபோல வீழ்த்தவே முடியாத ஒரு அணியாக இருந்த ராஜஸ்தான் அணி, தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்று தங்களுடைய இரண்டாவது இடத்தை தக்கவைத்துக்கொள்ள போராடிவருகிறது. என்னமா அடிக்கிறாங்க பா என்று ஆச்சரியப்பட்ட நிலையிலிருந்து, என்ன இவ்ளோ மோசமா விளையாடுறாங்க என்ற நிலைக்கே பல அணிகள் தள்ளப்பட்டுள்ளன. 3வது மற்றும் 4வது இடத்திற்கு மட்டும் ”சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்” முதலிய 6 அணிகள் போராடிவருகின்றன.

RCB vs SRH
RCB vs SRHpt desk

வெற்றி-தோல்வி என மாறிமாறி வரும் நிலையில் புள்ளிப்பட்டியலில் கணிக்கவே முடியாத அளவு குளறுபடி ஏற்பட்டுள்ளது. ராஜாஸ்தானை வீழ்த்திய சென்னை அணி நல்ல ரன்ரேட்டுடன் 3வது இடத்திலும், டெல்லியை வீழ்த்திய ஆர்சிபி அணி 5வது இடத்திற்கு முன்னேறி சென்னை அணிக்கு வில்லனாகவும் மாறியுள்ளது.

csk vs rcb
BCCI அழுத்தத்தால் தான் ஹர்திக் தேர்வு.. டி20-லிருந்து ஓய்வுபெற ரோகித் முடிவு! அதிர்ச்சி தகவல்!

என்ன நடந்தால் RCB-CSK இரண்டு அணிகளும் Playoff செல்லும்?

இந்த கடினமான நிலையில், ஆர்சிபி அணி பிளே ஆஃப் செல்ல லக்னோ, சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் தோல்வியை சந்திக்க வேண்டும் என்ற நிலையிலும், சென்னை அணி பிளே ஆஃப் செல்ல லக்னோ, ஆர்சிபி அணிகள் தோற்கவேண்டும் என்ற நிலையிலும் நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

csk vs rcb
csk vs rcb

சென்னை மற்றும் பெங்களூர் இரண்டு அணிகளும் ப்ளேஆஃப்க்கு செல்ல வேண்டுமானால், சென்னை அணியை பெங்களூரு வெல்ல வேண்டும், ஹைதராபாத் அணி தனது அடுத்த இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும். லக்னோ அணி எஞ்சியுள்ள இரு போட்டிகளில் ஏதேனும் ஒன்றிலாவது வெல்ல வேண்டும். அதேசமயத்தில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் ஹைதராபாத், லக்னோ, டெல்லி, குஜராத் போன்ற அணிகளை விட அதிக ரன்ரேட்டுடன் முடிக்க வேண்டும்.

csk vs rcb
‘சதமடித்த சாய் சுதர்சன்..’ - சச்சின் சாதனையை முறியடித்து முதல் இந்திய வீரராக வரலாறு! மிரண்டுபோன CSK!

யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்! ஸ்டேட்ஸ் என்ன?

எல்லாம் சரிதான் முதலில் சென்னை அணியை ஆர்சிபி வீழ்த்த வேண்டுமே என ஒரு பக்க ரசிகர்களும், 5 போட்டியில் வரிசையா வின் பண்ணி நல்ல ரன்ரேட்டில் இருக்கும் ஆர்சிபி அணியால் சென்னை அணியை அடிக்குறது ரொம்ப ஈசி என மற்றொரு பக்க ரசிகர்களும் தற்போதே சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

RCB
RCB

இந்த இரண்டு அணியில் யாருக்கு வெற்றிபெற அதிக வாய்ப்பு இருக்கிறது, சின்னசாமியில் எந்த அணி அதிக வெற்றிகளை பெற்றிருக்கிறது என்று பார்த்தால், இதுவரை இரண்டு அணிகளும் 10 போட்டிகளில் சின்னசாமி மைதானத்தில் மோதியிருக்கும் நிலையில், சிஎஸ்கே அணி ஒரு போட்டியில் ஆர்சிபியை விட அதிகமாகவே வென்றுள்ளது.

csk vs rcb
“Impact Player விதி நிரந்தரமானது அல்ல..” - சர்ச்சைக்குரிய விதிமுறை குறித்து ஜெய் ஷா பதில்!

எந்த அணி பலத்துடன் இருக்கிறது!

ஆனால் தற்போதைய இரண்டு அணிகளின் நிலையை வைத்து பார்த்தால், பேட்டிங்கில் சென்னை அணியை விட ஆர்சிபியின் கைகளே ஓங்கியுள்ளது. சிஎஸ்கே அணிக்கு எதிராக எப்போதும் சிறப்பாக செயல்படும் விராட் கோலி அபாரமான ஃபார்மில் இருப்பது சென்னை அணிக்கு பெரிய பாதகாமாக அமையும். அதேநேரத்தில் ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்த்து விளையாடும் ரஜத் பட்டிதார் மிடில் ஆர்டரில் வருவதால், சென்னை அணியின் ஸ்பின்னர்களுக்கு அழுத்தம் அதிகமாகவே இருக்கும். பந்துவீச்சில் துஷார் தேஸ்பாண்டே நல்ல ஃபார்மில் இருக்கிறார், அவரை தவிர சிமர்ஜீத் சிங் விக்கெட் டேக்கராக மாறியுள்ளார். இவர்கள் இரண்டு பேரை தவிர மற்ற பவுலர்கள் அனைவரும் ரன்களை விட்டுக்கொடுக்கும் பவுலர்களாகவே இருந்துவருகின்றனர்.

dube
dube

சென்னை அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில், கேப்டன் ருதுராஜ் மட்டுமே தனியாளாக போராடிவருகிறார். டேரில் மிட்செல் சிறப்பாக செயல்படும் போதிலும் முக்கியமான தருணத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறிவிடுகிறார். சிஎஸ்கே அணியின் ஹிட்டர்களாக இருக்கும் மொயின் அலி மற்றும் ஷிவம் துபே இருவரும் X ஃபேக்டர் வீரர்களாக இருந்துவருகின்றனர். இந்த இரண்டு வீரர்களும் 30 பந்துகள் வரை பிடித்துவிட்டால், ஆர்சிபி அணியின் பவுலர்களுக்கு அழுத்தம் அதிகமாகிவிடும். ஆர்சிபி அணி பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ளது, ஆனால் அந்த அணியின் பவுலர்களுக்கு அழுத்தம் போட்டால் நிச்சயம் பெரிய டோட்டலை சிஎஸ்கே எடுத்துவர முடியும்.

csk vs rcb
'துண்டு ஒருமுறைதான் தவறும்..' 7க்கு6 கோப்பை நோக்கி செல்லும் CSK! RR அணிக்கு ஹாட்ரிக் தோல்வி!

டாஸ் முக்கியமானதாக இருக்கும்!

எல்லாவற்றையும் தாண்டி இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றிபெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால், டாஸ்ஸில் வெற்றிபெறுவது பெரிய விசயமாக பார்க்கப்படும்.

dhoni - ruturaj
dhoni - ruturaj

ஆனால் 13 போட்டிகளில் 11-ல் டாஸ்ஸை இழந்திருக்கும் ருதுராஜ் கெய்க்வாட், முக்கியமான போட்டியில் டாஸ்ஸை வெல்லவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் இருக்கப்போகிறார். நிச்சயம் இந்தபோட்டியில் இரண்டு அணிகளும் சரிசமமான பலத்துடன் வாழ்வா-சாவா போராட்டம் நடத்தவிருக்கின்றன.

csk vs rcb
DCயை வீழ்த்திய பெங்களூரு.. இதெல்லாம் நடந்தா CSK வெளியே RCB உள்ளே! கால்குலேட்டர எடுத்து வைங்க மக்களே!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com