ரூ.81,000 கோடி லாபம்.. சாதனை படைத்த 3 எரிபொருள் விற்பனை நிறுவனங்கள்!

3 எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்கள் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.81,000 கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்புதிய தலைமுறை

இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவிகிதம் இறக்குமதி செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்கள் கடந்த 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.81,000 கோடி நிகர லாபம் ஈட்டி சாதனை படைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

2023 ஏப்ரல் முதல் 2024 மாா்ச் வரையிலான நிதியாண்டில் பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எரிபொருள் சில்லறை விற்பனை நிறுவனங்கள் மொத்தம் ரூ.81,000 கோடி லாபம் ஈட்டியுள்ளன. இந்தத் தொகை, இதுவரை இல்லாத வருடாந்திர லாபமாகக் கூறப்படுகிறது.

எண்ணெய் நெருக்கடிக்கு முந்தைய ஆண்டுகளில் இந்த 3 நிறுவனங்களும் ரூ.39,356 கோடி நிகர லாபம் ஈட்டிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில், கடந்த நிதியாண்டில் அந்த நிறுவனங்களின் நிகர லாபம் மிகவும் அதிகமாக உள்ளது. சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறைந்தபோது, எரிபொருள்களின் விலையையும் குறைக்கவேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இக்கோரிக்கையை எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கவில்லை.

இதையும் படிக்க: பெண்கள் சிவப்பு நிற லிப்ஸ்டிக் பயன்படுத்தத் தடை.. வடகொரியா அதிரடி!

கச்சா எண்ணெய்
ஈரான் - இஸ்ரேல் மோதல்: கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்..!

கச்சா எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்தபோது விலையை ஏற்றாமல் எரிபொருள்களை விற்பனை செய்ததால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக நிறுவனங்கள் காரணம் தெரிவித்திருந்தன. இதன் காரணமாகவே எண்ணெய் நிறுவனங்கள் கடந்த நிதியாண்டில் சாதனை லாபத்தைப் பதிவு செய்துள்ளன. 2023-24-ஆம் நிதியாண்டில் இந்தியன் ஆயில் நிறுவனம் ரூ.39,618.84 கோடி நிகர லாபம் ஈட்டியது.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்file image

இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.8,241.82 கோடியாக இருந்தது. மதிப்பீட்டு நிதியாண்டில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.26,673.50 கோடியாக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் நிகர லாபமான ரூ.1,870.10 கோடியைவிட அதிகம். அதேபோல், 2022-23-ஆம் ஆண்டில் ரூ.8,974.03 கோடி நிகர இழப்பைப் பதிவு செய்திருந்த ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் 2023-24-ஆம் நிதியாண்டில் ரூ.14,693.83 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது என அந்த நிறுவனத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: முதல்வரின் தனி உதவியாளர் தாக்கியதாக ஆம் ஆத்மியின் ஸ்வாதி மாலிவால் புகார் - டெல்லி அரசியலில் பரபரப்பு

கச்சா எண்ணெய்
நீடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்.. கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் வருமா? இந்திய வர்த்தம் பாதிக்குமா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com