தோனிக்கு 7னா எனக்கு 6|புதுப்பட புரமோஷனில் ஈடுபடும் ஜான்வி கபூர்! #Viralphotos

பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் புதுப் படத்தின் புரமோஷன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஜான்வி கபூர், தோனி
ஜான்வி கபூர், தோனிட்விட்டர்

பாலிவுட்டில் படு பிஸியான வளரும் நடிகைகளில், மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் ஒருவர். இவர், தற்போது கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மகி (Mr & Mrs Mahi) என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இந்தப் படம் வரும் மே 31ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் மஹிமா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜான்வி கபூரின் படத்தின் புரமோஷன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படங்களில் அவர் அணிந்திருந்த ஸ்லீவ்லெஸ் டாப்ஸில் '6' என்ற எண் இடம்பெற்றிருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஜான்வி கபூர், ” '7' என்பது கிரிக்கெட் வீரர் தோனியின் ஜெர்சி நம்பர் ஆகும். அது அவருடைய எண் மட்டுமே ஆகும். வேறு யாருக்கும் சொந்தம் கிடையாது. எனவே மஹிமா கதாபாத்திரத்தின் ஜெர்சிக்கு அதுபோல மற்றொரு நம்பரைத் தேர்வுசெய்ய வேண்டி இருந்ததால் எனது லக்கி நம்பரான '6' என்ற நம்பரைப் பயன்படுத்திக்கொண்டோம். இந்த எண் அதிர்ஷ்டத்தை கொண்டுவரும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: உயிருக்குப் போராடிய கணவர்.. பார்க்கப் புறப்பட்ட மனைவி.. விமானம் ரத்தானதால் நிகழ்ந்த சோகம்!ட்

ஜான்வி கபூர், தோனி
கமலின் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாகும் ஜான்வி கபூர்?- வெளியான தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com