‘இதுதான் மும்பை அணியில் கடைசி IPL..’! ரோகித்-அபிஷேக் நாயர் சர்ச்சை உரையாடல் குறித்து KKR CEO பதில்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா செய்த உரையாடல் சர்ச்சையான நிலையில், சமூகவலைதளத்தில் பதிவிட்ட வீடியோவை கேகேஆர் நிர்வாகம் நீக்கியது.
rohit sharma
rohit sharmaweb

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த ரோகித் சர்மாவை பதிவியிலிருந்து நீக்கி, புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதிலிருந்தே ரோகித் விரைவில் மும்பை அணியிலிருந்து வெளியேறிவிடுவார் என்று கூறப்பட்டுவருகிறது.

டி20, ஓடிஐ, டெஸ்ட் என மூன்றுவடிவ இந்திய கிரிக்கெட் அணியிலும் கேப்டனாக இருக்கும் ஒரு வீரர், ஐபிஎல் தொடரில் கேப்டனாக இல்லாததை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மும்பை அணியின் இந்த செயலால் ரோகித் சர்மாவும் அணியிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்திருந்தாலும், அணி நிர்வாகத்தை போல தாமும் தவறாக செல்லக்கூடாது என நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு வீரராக விளையாடி வருகிறார்.

rohit - hardik
rohit - hardikweb

என்ன தான் ரோகித் மும்பை அணியில் விளையாடிவந்தாலும் ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையே கருத்து மோதல் இருந்துவருகிறது. அதனால் எதிர்வரும் மெகா ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணியிலிருந்து வெளியேறி வேறு அணிக்கு ரோகித் சென்றுவிடுவார் என கூறப்படுகிறது.

rohit sharma
ஆர்சிபியா? சிஎஸ்கேவா? யாருக்கு வெற்றிவாய்ப்பு அதிகம்? Stats சொல்வது என்ன? ஒரு அலசல்!

‘இதுதான் கடைசி ஐபிஎல்’ - சர்ச்சையான உரையாடல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணியின் பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் நீண்டநேரம் பேசிய ரோகித் சர்மா, கொல்கத்தா அணி வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களுடன் கேகேஆர் டக்அவுட்டுக்கே சென்று அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். கொல்கத்தா அணியுடனான ரோகித்தின் சந்திப்பு மும்பை அணியிலிருந்து வெளியேறும் முடிவா என்ற சர்ச்சையை கிளப்பியது.

rohit sharma
rohit sharma

அதற்கும் மேலாக சென்று அபிஷேக் நாயருடன் நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்த ரோகித் சர்மா, அந்த உரையாடலில் மும்பை அணியில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்தும், இதுதான் தனக்கு மும்பை அணியில் கடைசி ஐபிஎல் என்று கூறியதாகவும் செய்தி வெளியானது. ரசிகர்களும் இந்த சந்திப்பு குறித்து அதிகமாக பேச ஆரம்பித்த நிலையில், ரோகித் சர்மா - அபிஷேக் நாயர் இருவரும் பேசிக்கொண்ட வீடியோவை பகிர்ந்திருந்த கொல்கத்தா அணி சமூகவலைதளத்தில் இருந்து டெலிட் செய்தது.

rohit sharma
ரோகித், பும்ராவை தொடர்ந்து சூர்யகுமார்? தொடர்ந்து உடையும் மும்பை அணி! என்ன நடந்தது?

சர்ச்சை உரையாடல் குறித்து பதிலளித்த கொல்கத்தா சிஇஒ!

ரோகித் சர்மா மற்றும் அபிஷேக் நாயர் உடனான உரையாடல் குறித்து ரெவ் ஸ்போர்ட்ஸ் உடன் பேசியிருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிஇஒ வெங்கி மைசூர், ”இருவரின் இயல்பான சந்திப்பை டீ-கப் ஒன்றில் புயல் உருவாகியதை போல மாற்றிவிட்டனர். அவர்கள் இருவரும் நீண்டகாலமாக நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள், அதனால் ஒரு சந்திப்பிற்கு பிறகு மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான் இருவரிடமும் பேசினேன், அவர்கள் வேறு ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர் இந்த விசயத்தை கையில் எடுத்துக்கொண்டு பெரிதாக மாற்றிகொண்டிருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

rohit sharma
BCCI அழுத்தத்தால் தான் ஹர்திக் தேர்வு.. டி20-லிருந்து ஓய்வுபெற ரோகித் முடிவு! அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com