ரோகித், பும்ராவை தொடர்ந்து சூர்யகுமார்? தொடர்ந்து உடையும் மும்பை அணி! என்ன நடந்தது?

ஹர்திக் பாண்டியா கேப்டனாக மாறிய பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு குழுக்களாக பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
rohit - hardik
rohit - hardikweb

ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் இடையேயான கருத்து மோதல், மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டாக உடைத்துள்ளது. மும்பை அணியை 5 முறை ஐபிஎல் கோப்பைக்கு அழைத்துச்சென்ற ரோகித் சர்மாவை ஓரங்கட்டிய மும்பை அணி, கேப்டன்சி பொறுப்பை தூக்கி ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது.

மும்பை அணியின் இந்த செயலால் ரோகித் சர்மாவிற்கு ஆதரவாக பும்ரா, சூர்யகுமார் யாதவ், மத்வால், திலக் வர்மா முதலிய வீரர்களும், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக இஷான் கிஷன் முதலிய மற்ற வீரர்களும் என அணிக்குள் இரண்டு குழுக்களாக பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. வீரர்களுக்குள் இருந்த இந்த பிளவால் நடப்பு ஐபிஎல் தொடரில் வெற்றிபெற முடியாமல் தடுமாறிய மும்பை அணி, முதல் அணியாக தொடரிலிருந்து வெளியேறியது.

Hardik Pandya
Hardik Pandya

இதற்கிடையே ரோகித் சர்மா உடனான கருத்துவேறுபாடு காரணமாகவும், ஐபிஎல் தொடரில் மோசமாக செயல்பட்டதாலும் ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பை அணியில் இருக்க மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் வெளியான தகவலுக்கு மாறாக ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பையில் இடம்பிடித்தது மட்டுமில்லாமல் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.

rohit - hardik
DCயை வீழ்த்திய பெங்களூரு.. இதெல்லாம் நடந்தா CSK வெளியே RCB உள்ளே! கால்குலேட்டர எடுத்து வைங்க மக்களே!

பிசிசிஐ அழுத்தத்தால் தான் ஹர்திக் இடம்பெற்றார்!

சர்ச்சை ஓய்ந்துவிட்டது என்று நினைத்தால், ஹர்திக் பாண்டியா டி20 உலகக்கோப்பையில் தேந்தெடுக்கப்பட்டதில் துளியும் ரோகித் சர்மாவிற்கு விருப்பம் இல்லை என்றும், பிசிசிஐ அழுத்தம் கொடுத்ததால் தான் ஹர்திக் பாண்டியா அணியில் இடம்பெற்றுள்ளார் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஹர்திக், ரோகித் சர்மா
ஹர்திக், ரோகித் சர்மாpt web

ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்படும் அதிக முக்கியத்துவம் காரணமாக அழுத்தத்தில் இருக்கும் ரோகித் சர்மா, டி20 உலகக்கோப்பைக்கு பின் குறுகிய வடிவ கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

rohit - hardik
'துண்டு ஒருமுறைதான் தவறும்..' 7க்கு6 கோப்பை நோக்கி செல்லும் CSK! RR அணிக்கு ஹாட்ரிக் தோல்வி!

ஹர்திக் வந்ததால் எழுந்து சென்ற ரோகித்-சூர்யகுமார்!

ஒருபக்கம் ரோகித் ஓய்வு என கூறப்படும் நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இன்னும் பிளவு இருந்துதான் வருகிறது என்றும், ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்த ரோகித் ஆதரவாக இருக்கும் வீரர்கள் பயிற்சியில் ஈடுபடுவதில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

லோக்கல் செய்திதாளில் வெளிவந்திருக்கும் தகவலின் படி, சமீபத்தில் நடைபெற்ற ஈடன் கார்டன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும், ஹர்திக் பாண்டியா பயிற்சி செய்ய வந்ததும் சேர்ந்து பயிற்சியில் ஈடுபடாமல் எழுந்து சென்றுவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், அப்போதைய கேகேஆர் போட்டியில் கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் மற்றும் ஸ்டாஃப்களுடன் ரோகித் சர்மா நீண்ட நேர உரையாடலில் ஈடுபட்டது பேசுபொருளாக மாறியது. அந்த உரையாடலில் ரோகித் சர்மா மும்பை அணியில் ஏற்பட்டிருக்கும் பிளவு குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. எதிர்வரும் ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணியில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என கூறப்படும் நிலையில், ஆர்சிபி, கேகேஆர், லக்னோ முதலிய மூன்று அணிகளுக்கு செல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Hardik Pandya
Hardik Pandyatwitter

மும்பை அணியில் தொடர்ந்து நிலவிவரும் மோசமான சூழல் காரணமாக ஏற்கனவே முன்னாள் கேப்டன் ரோகித், பும்ரா முதலிய வீரர்கள் வெளியேறிவிடுவார்கள் என கூறப்படும் நிலையில், ரோகித்சர்மாவின் விசுவாசியாக பார்க்கப்படும் சூர்யகுமார் யாதவும் வெளியேறிவிடுவாரா என அச்சத்தில் மும்பை ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.

rohit - hardik
BCCI அழுத்தத்தால் தான் ஹர்திக் தேர்வு.. டி20-லிருந்து ஓய்வுபெற ரோகித் முடிவு! அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com