தாமஸ் விண்டர்பெர்கின் 'அனதர் ரவுண்டு' படத்தின் சிறப்புக் காட்சியோடு, 2021 ஜனவரி 16 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் தொடங்கவிருக்கிறது.
சிறந்த நடிகருக்கான கேன்ஸ் விருதை வென்ற மேட்ஸ் மிக்கெல்சன் நடித்துள்ள 'அனதர் ரவுண்டு' திரைப்படம், இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ள கவனத்துக்குரிய திரைப்படங்களில் ஒன்றாகும். டென்மார்க் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள திரைப்படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
'மெஹ்ருன்னிசா' என்னும் திரைப்படத்தின் சர்வதேச சிறப்புக் காட்சியும் இந்த திருவிழாவில் நடைபெறும். சஞ்சய் குமார் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஃபருக் ஜஃபார் நடித்துள்ளர். பெண்மணி ஒருவரின் வாழ்நாள் கனவு குறித்து இப்படம் விவரிக்கிறது.
கியோஷி குரூசவாவின் 'வைஃப் ஆஃப் அ ஸ்பை' திரைப்படத்தின் இந்திய சிறப்புக் காட்சியோடு 2020 ஜனவரி 24 அன்று 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நிறைவுபெறும். இந்த ஜப்பானிய திரைப்படம், வெனிஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான வெள்ளி சிங்கம் விருதை வென்றுள்ளது.
51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா, 2020-க்கு தேர்வு செய்யப்பட்ட இந்திய திரைப்படங்களின் பட்டியலில் தமிழ் திரைப்படங்களான 'அசுரன்' மற்றும் 'தேன்' ஆகிய இரு திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன என்பது கவனிக்கத்தக்கது. 183 இந்திய திரைப்படங்களில் இருந்து 23 திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பல்வேறு மொழிகளிலிருந்து இந்த திரைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
Loading More post
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
திமுக - ஐயூஎம்எல், மமக கட்சிகள் இடையே கையெழுத்தானது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்
துணை முதல்வர் ஓபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்ட தேமுதிக!
கன்னியாகுமரியில் ராகுலின் படகு சவாரிக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு!
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?