தமிழத்தில் ஜனவரி இராண்டாம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஜனவரி இரண்டாம் ஆம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை மேற்கொள்ளப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. மாநில சுகாதார செயலாளர்களுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் இந்த தகவலை தெரிவித்தார்.
அனைத்து மாநில தலைநகரங்களிலும் 3 கட்டங்களாக கொரோனா தடுப்பூசி ஒத்திகையை நடத்த மத்திய அரசு முடிவு செய்து இருக்கிறது. அதன் படி கொரோனா தடுப்பூசிக்கு மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் தயாராக இருக்குமாறும், கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில தலைவர்கள் மற்றும் சில மாவட்டங்களை தேர்வு செய்து கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பயிற்சி நடைபெறும் என சுகாதாரத்துறை செயலர் ராதகிருஷ்ணன் தெரிவித்தார். ஏற்கனவே ஆந்திரா உள்பட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?