உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டுவகை சாட்டிலைட்டை தஞ்சை மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன். இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார். இவர் அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து ஆண்டுதோறும் நடத்தும் cubes in space என்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில், 2019-2020 -ல் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார்.
இவர் கண்டுபிடித்த இரண்டு Femto சாட்டிலைட்களும் நாசாவில் இருந்து, வரும் 2021ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. 73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்ட இந்த கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளில் இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து நாசாவிலிருந்து ஏவ இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ரியாஸ்தீன் தேர்வாகியுள்ளார். இந்த சாட்டிலைட்களுக்கு விஷன் சாட் V1 மற்றும் V2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த இரு சாட்டிலைட்டுகளும் 37mm உயரமுடையது மற்றும் 33 கிராம் எடையுடையது.
இவைதான் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம்டோ செயற்கைக்கோள்கள் ஆகும். இந்த இரு சாட்டிலைட்களும் பாலி எதரி இமைடு அல்டம் என சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக்கால், 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைக்கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை இரண்டுமே தொழில்நுட்ப சோதனை செயற்கைக்கோள்கள். சாட்டிலைட் நோக்கமானது Atmospheric and space studies and microgravity material research. இதில் 11 சென்சார்கள் உள்ளன. அதன்மூலம் 17 parameter-களை கண்டறிய முடியும். இவை இரண்டும் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக மாணவர் ரியாஸ்தீன் தெரிவித்தார்.
Loading More post
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 41 கைதிகளுக்கு கொரோனா!
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பெங்களூரூ: எரியூட்ட சடலத்துடன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆம்புலன்ஸ்கள்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
அமெரிக்க தடையால் இந்தியாவுக்கான தடுப்பூசி உற்பத்திக்கு பாதிப்பா? - ஒரு விரிவான பார்வை
கொரோனா காலம்.. உணவு முறையும், நோய் எதிர்ப்பு சக்தியும்- அரசு சித்த மருத்துவர் வழிகாட்டுதல்
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ