நான்கு வழிச் சாலைகளில் அதிகம் ஒளிரும் லைட்டுகளை பயன்படுத்தி கொள்ளை முயற்சியில் ஈடுபடும் நபர்களால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
மதுரையில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், மேலூரிலிருந்து துவரங்குறிச்சி வரை செல்லும் பகுதிகளில் வாகனங்களில் செல்வோர் மீது கற்கலைவீசி தாக்குதல் நடத்தி கொள்ளைச் சம்பவம் நடைபெறுவதாக ஆடியோ ஒன்று கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இந்நிலையில் தற்போது அதிக அளவில் ஒளிரும் லைட்டுகளை பயன்படுத்தி எதிரே வரும் வாகன ஓட்டிகளை நிலைகுலையச் செய்து கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த சிசிடிவி காட்சியில் எதிரே வரும் வாகனத்தின் மீது ஒருவர் அதிக ஒளி உமிழும் டார்ச் லைட்டை அடிக்கிறார். அப்போது வாகனத்தின் ஓட்டுநர் நிலைதடுமாறி வாகனத்தை நிறுத்துகிறார். உடனே லைட் அடிக்கும் நபரின் பின்புறமிருக்கும் புதருக்குள் பதுங்கியிருந்த 5பேர் உருட்டுக் கட்டைகளுடன் அந்த வாகனத்தை நோக்கி வரும்போது அந்த வாகன ஓட்டி மீண்டும் தனது வாகனத்தை பின்புறமாக இயக்கி தப்பித்து செல்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் அந்த வாகனத்தை நோக்கி தங்கள் கையில் வைத்திருந்த உருட்டுக் கட்டைகளை வீசும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த சிசிடிவி குறித்து காவல்துறையினர் முழுமையான விசாரணை மேற்கொண்ட பிறகே, குற்றவாளிகள் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரும். இதுபோல வைரலாகும் வீடியோக்களால், இரவு நேரங்களில் மதுரையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
Loading More post
சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வெளுத்து வாங்கிய இந்திய அணி - மேட்ச் ரிவ்யூ
சசிகலா ரிலீஸாகும் நாளில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு!
’டீம்க்கு கிடைத்த வெற்றி’.. ’தமிழக வீரர்கள் சிறப்பு’ - முதல்வர், ஸ்டாலின் வாழ்த்து!
“பிரைவஸி பாலிசி மாற்றங்களை கைவிடுங்கள்” வாட்ஸ் அப் சி.இ.ஓ-வுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்
ஆஸி. மண்ணில் மூவர்ணக் கொடியுடன் வெற்றி நடைபோட்ட இந்தியா- ஆல்பம்
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?