நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. கட்சிப் பணிகள் இருப்பதால், முதலில் தனது காட்சிகளை முடித்துவிடும்படி வேண்டுகோள் விடுத்ததால் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் தற்போது படமாக்கி வருகிறது படக்குழு.
இதைத்தொடர்ந்து அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியானது. இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கொரோனா பரிசோதனை மேற்கோண்டதாகவும் அதில் அவருக்கு கொரோனா நெகட்டிவ் வந்ததாகவும் படக்குழு தகவல் தெரிவித்தது.
இந்நிலையில், ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரஜினிகாந்துக்கு கொரோனா பாதிப்பு குறித்த எந்த அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தம் சீராகும்வரை ரஜினிகாந்த் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading More post
அன்றே கணித்த சுனில் கவாஸ்கர்: 32 ஆண்டுகால ஆஸி.,யின் சரித்திரத்தை தகர்த்த இந்தியா
வாஷிங்டன் சுந்தர், பன்ட் விளாசல்! - டெஸ்ட் தொடரை வென்றது இந்தியா
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா: பொறுப்பேற்கும் முன்பே பைடன் சந்திக்கும் முதல் சவால்!
“சசிகலாவை சேர்க்க முடியாது” -பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பழனிசாமி பேட்டி
"டாக்டர் சாந்தா... அடையாறின் மற்றோர் ஆலமரம்!" - நெட்டிசன்களின் ட்வீட்டாஞ்சலி
மருத்துவத் துறைக்கு தன்னலமற்ற சேவை வழங்கிய மருத்துவர் சாந்தா கடந்துவந்த பாதை
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?