பிரிட்டனில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் மரபியல் மாற்றமடைந்த வீரியமிக்க கொரோனா பரவி வரும் சூழலில் தற்போது பிரிட்டனிலிருந்து டெல்லி வழியாக சென்னை வந்த ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அந்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை விமானநிலையத்தில் ஆய்வுசெய்த சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுகுறித்த தகவலை கூறினார். அவர் பேசுகையில், ’’பிரிட்டனிலிருந்து டெல்லி வந்த 553 பேருக்கும் சோதனை செய்யப்பட்டது. அதில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கிங்க்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வரும் அனைவருக்குமே ஆர்டி பிசிஆர் சோதனை எடுக்கப்பட்டு இன்றுவரை 96 மணிநேரத்திற்கு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். கடந்த 10 நாட்களில் டெல்லி மற்றும் பிரிட்டனிலிருந்து வந்த அனைவரின் பெயர் பட்டியலும் எடுக்கப்பட்டு, அவர்களுக்கு சோதனை எடுக்கப்பட்டது. அவர்களை மாநகராட்சி குழு ஒன்று கண்காணித்து வருகிறது. பல்வேறு கட்டங்களாக இந்த கண்காணிப்பு நடந்துவருகிறது’’ என்றார்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?