இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது குறித்து எச்சரித்துள்ள அந்நாட்டு அரசு, தென்கிழக்கு இங்கிலாந்து மற்றும் லண்டன் நகரில் தீவிர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
புதிய நோய்ப் பரவல் உருவாகியுள்ளதை தொடர்ந்து, பிரிட்டன் சுகாதாரத்துறை அதிகாரிகளோடு தாங்கள் தொடர்பில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.
கொரோனா வைரஸின் ஆரம்ப வடிவத்தை விடவும் இந்த புதிய வடிவம் அதி வேகமாகப் பரவுகிறது என்றும் ஆனால், பழைய வடிவத்தைவிட இது அதிக மரணத்தை விளைவிப்பதாக இல்லை என்றும் இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஒரு வாரத்திற்கு முன்பு இது பாதியாக இருந்தது. 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 67,000-க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.
Loading More post
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
'ஜல்லிக்கட்டு நாயகன்' ஓபிஎஸ்! - அலங்காநல்லூரில் முதல்வர் இபிஎஸ் புகழாரம்
அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: விளம்பர இடைவேளையின்றி சிறப்பு நேரலை!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு