[X] Close >

'ஆன்மிகத்திற்கு மாறிவிட்டீர்களா, பாஜக இயக்குகிறதா?'- தடாலடி கேள்விகளுக்கு கமல் உடனடி பதில்

kamalhassan-byte-about-politics-in-tirunelveli

பாஜகவால் இறக்கிவிடப்பட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு ‘யாரும் என்னை இயக்கவோ, இறக்கிவிடவோ முடியாது’ என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்தார்.


Advertisement

தமிழகத்தில் சட்டமன்றத்தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தென் தமிழகத்தில் மக்களை சந்தித்து பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார்.

Rajinikanth, Kamal Haasan Tease Blockbuster Alliance For Tamil Nadu


Advertisement

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம், ரஜினியுடன் இணைவீர்களா? கமல் ஆன்மிகத்தை நோக்கி செல்கிறாரா? என கேள்விகள் எழுப்பப்பட்டன.

அதற்கு “இந்த கேள்விக்கு பதில் சொல்லும் நேரம் இதுவல்ல. ஆன்மிகத்தை நோக்கி நான் செல்லவில்லை. என்னை நோக்கியும் அது வரத்தேவையில்லை. மக்களிடத்தில் ஆன்மிகம் இருக்கிறது என்றால் அதுவும் என் வாழ்வில் ஒரு அங்கமாகத்தான் இருக்கும். எனக்கு தேவையா இல்லையா என்பது என்னுடைய பிரச்னை. ஒரு நபரின் அன்புக்கும், கட்சியில் சேருவதற்கும் நாங்கள் நெற்றியை பார்த்து முடிவு செய்வதில்லை. கண்களை பார்த்துதான் முடிவு செய்கிறோம். அதில் நேர்மை தெரிந்தால் அதுதான் முதல் தகுதி” என்றார். மேலும் செய்தியாளர்களின் பல கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார்.image

கேள்வி: ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லோரும் ஓட்டுக்களை சிதறடிப்பதற்காக பாஜகவால் இறக்கிவிடப்பட்டுள்ளார்களா?


Advertisement

பதில்: குதிப்பது, இறக்கிவிடப்படுவது என்பதெல்லாம் எனக்கு பொருந்தாது. யாராவது பிடித்து கொண்டு வந்து இறங்கி விடும் அளவிற்கு தள்ளாமை இல்லை. நான் பி டீம் என்றால் அது காந்திக்குதான். மற்றபடி நாங்கள்தான் ஏ டீம். கொள்கை இல்லாமல் வேறு வழியில்லாம் அரசியலுக்கு வரவில்லை. இதில் எனக்கு அசௌகரியம்தான் அதிகம். இருந்தாலும் இந்த முடிவுகளை எடுப்பதற்கு 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் நான் முன்கூட்டியே சொல்லவில்லை. ஒரு சினிமா எடுத்தால் கூட எனக்கு பிடித்ததும் மக்களுக்கு பிடித்ததும்தான் எடுப்பேன். என்னை யாரும் சொல்லி படம் எடுக்க வைக்க முடியாது. அப்படியென்றால் என் படத்தின் கதையெல்லாம் வேற மாதிரி இருந்திருக்கும். எனக்கு நியாயம் என்று தோன்றுவதை மக்களுக்கு நல்லது என்று தோன்றுவதைதான் செய்வேன். என் முந்தைய தொழிலில் இருந்தது போன்றுதான் சமூக சேவையில் இருப்பேன். என்னை இயக்கவோ தள்ளவோ முடியாது.

image

கேள்வி: எம்.ஜி.ஆரை தேர்தலுக்காக உரிமை கொண்டாடுகிறீர்களா?

பதில்: எம்.ஜி.ஆரை பற்றி இப்போது பேசவில்லை. 40 ஆண்டுகளுக்கு முன்பே பேசிருக்கிறேன். இப்போது நீங்கள் என்னை உன்னிப்பாக கவனிப்பதால் வெளிப்படுகிறது. எம்.ஜி.ஆர் என்னை கொஞ்சியுள்ளார். நெற்றியில் முத்தமிட்டுள்ளார். தொலைபேசியில் நீண்ட உரையாடல் நடத்தியிருக்கிறார். இதையெல்லாம் நான் மார்த்தட்டி சொல்லிக்கொள்ளவில்லை. அவ்வளவுதான். போஸ்டரில் எம்.ஜி.ஆர் படத்தை சிறியதாக போட்டவர்கள்தான் இந்த அதிமுக கோஷ்டி. யார் அவரை அரசியலுக்காக கையில் எடுக்கிறார்கள். யார் அன்பிற்காக கையில் எடுக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. உங்களுக்காவது அது தெரிய வேண்டும்.

கேள்வி: திமுக கூட்டணிக்கு அழைத்தால் செல்வீர்களா?

பதில்: இப்போது அதை பேசுவதற்கு தருணமே இல்லை. நல்ல தருணம் எங்களுக்கு நடந்து கொண்டிருப்பதாக நினைக்கிறோம். 

கேள்வி: உங்கள் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பிருக்கிறதா?

பதில்: கண்டிப்பாக இருக்கிறது. நல்லவர்கள் எங்கள் பக்கம் சேருவார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம். அது அப்படிதான் இருக்க வேண்டும் என்பதை கவனித்து கொள்வோம்.

image

கேள்வி: நீங்கள் எந்த தொகுதியில் போட்டியிடுகீறீர்கள்? எத்தனை தொகுதியில் போட்டியிடுகிறீர்கள்?

பதில்: எனக்கு பல தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என அழைப்பு வருகிறது. அது எந்த தொகுதி என கலந்தாலோசித்துக் கொண்டிருக்கிறோம். எந்த தொகுதி என்று அனுகூலமாக சொன்னால்கூட அதை கண்டிப்பாக என்று சொன்னதுபோல் மாறிவிடும். அதனால் கொஞ்சம் நிதானித்து வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன். நான் ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிட எண்ணிக்கொண்டிருக்கிறேன். ஏனென்றால் அந்த தொகுதி மக்களிடம் சுற்றி குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய ஏதுவாக இருக்கும் என நினைக்கிறேன்.

மேலும், “இதுவரை இல்லாத அரசியலை நடத்த வேண்டும் என்பதே மக்கள் நீதி மய்யத்தின் ஆசை. முக்கியமாக, சட்டசபையில் ஒரு மீனவ வேட்பாளர் இருக்க வேண்டும். அதை நிகழ்த்த வேண்டும். நல்ல விஷயங்கள் எந்த சித்தாந்தத்தில் இருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை மய்யத்தாருக்கு உண்டு. இல்லத்தரசிகளுக்கு ஊதியம் என்ற திட்டத்தை நிறைவேற்றுவோம். விவசாயத்தில் சம உரிமை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும். சம கூலியே இல்லாத நிலை இப்போது நிலவுகிறது. டார்ச் லைட் சின்னம் மறுக்கப்பட்டுள்ளது. அதை போராடி பெறுவோம். தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைப்போம்” என்றார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close