[X] Close >

''பார்த்தவுடனேயே காதலில் விழுந்தேன்'' - சூட்கேஸை திருமணம் செய்துகொண்ட இளம்பெண்!

Woman-marries-briefcase-in-russia

ரஷ்யாவில் ஒரு இளம்பெண் சூட்கேஸை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்


Advertisement

திருமணம் தொடர்பான சில செய்திகள் நம்மை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் மூழ்கடித்துவிடுகின்றன. வெளிநாட்டு விநோதங்களாக சில திருமண செய்திகள் அமைந்துவிடுகின்றன. தன்னைத்தானே திருமணம் செய்துகொண்ட நபர், பொம்பையை திருமணம் செய்துகொண்ட நபர் போன்ற செய்திகள் சமீபத்தில் வெளியாகின. அந்த வரிசையில் ரஷ்யாவில் ஒரு திருமணம் ஆச்சரியப்பட வைத்துள்ளது. ரெய்ன் ஜார்டன் என்ற 24 வயது இளம்பெண் ஒருவர் சூட்கேசை திருமணம் செய்துள்ளார்.

image


Advertisement

சிறுவயது முதலே பொருட்களின் மீது தனக்கு ஈர்ப்பு உண்டு எனக்கூறும் அந்தப்பெண், இந்த சூட்கேஸ் மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய திருமணம் குறித்து பேசியுள்ள இளம்பெண், எனக்கு ஒரு ஆண் மீதும் விருப்பம் இருந்தது. ஆனால் தற்போது சூட்கேஸ் மீது காதல் வயப்பட்டுள்ளேன். அதனால் தான் அதனை திருமணம் செய்துகொண்டேன்.மனிதர்களை விட பொருட்களுடன் இருக்கும்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தன்னுடைய கணவனான சூட்கேசை 2015ம் ஆண்டு முதன்முதலாக பார்த்தேன்.

image

ஒரு போட்டோஷூட்டிற்காக கடையில் அதனை வாங்கினேன். முதல்முறை சூட்கேசை பார்க்கும்போதே காதலில் விழுந்துவிட்டேன். எனது கணவர் பெயர், ஜிடியான். நான் அவருடன் பேசுவேன். அவர் பேசுவதை நான் கேட்பேன். எங்களுக்குள் ஒரு ஆத்மார்த்தமான உரையாடல் நிகழும். அவர் வெறும் துணை மட்டுமல்ல. நல்ல கணவர். நல்ல நண்பர். ஆனால் மக்கள் பலர் என்னை புரிந்துகொள்ளவில்லை. நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிகிச்சை எடுக்கவேண்டும் எனவும் கூறுகின்றனர். மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு புரியாத ஒன்றை வைத்து மனிதர்களை தீர்மானிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close