சென்னையில் இரவு பணி முடிந்து பேருந்துக்காக காத்திருந்த இளம்பெண்ணிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட காவலரை மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
சென்னை முகப்பேரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு பணி முடித்து பேருந்துக்காக காத்திருந்துள்ளார். அப்போது அந்த வழியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த காவலர் ஒருவர், பேருந்துக்காக காத்திருந்த பெண்ணை அணுகி, தன்னுடன் வாகனத்தில் வருமாறு தகராறு செய்துள்ளார்.
இதைப் பார்த்த பொதுமக்கள் ஓடிவந்து போதையில் இருந்த காவலரை அடித்து உதைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் இதுதொடர்பாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்.
தகவலறிந்து வந்த போலீசார் குடிபோதையில் இருந்த காவலரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ராஜூ என்ற அவர், எம்.ஜி.ஆர் நகர் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவது விசாரணையில் தெரியவந்தது.
Loading More post
நீதிபதிகள் நியமனம் குறித்த பேச்சு: ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதி
அதானி துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து மாபெரும் இணையவழி பதாகைப் போராட்டம்: சீமான் அழைப்பு
"பத்ம விருதுகளை திருப்பியளிக்கவில்லை!" - இளையராஜா விளக்கம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’ ; 5 நாளில் இத்தனை கோடிகளா!
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
"யாருக்கும் விற்க எங்களிடம் எந்த தரவும் இல்லை!" - சிக்னல் சி.இ.ஓ அருணா சிறப்புப் பேட்டி
பைடன், கமலா பதவியேற்புக்காக 'காரிஸன்' நகரமாகும் வாஷிங்டன் டி.சி... அதென்ன 'காரிஸன்'?
'மீன் வகைகளில் கவனம் முக்கியம்!' - கர்ப்பிணிகளின் தினசரி டயட்டில் இருக்கவேண்டிய உணவுகள்
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?