தமிழகத்தில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் “மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் இது வழுவிழந்து அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிக்க கூடும்.
இதன்காரணமாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை முதல் அதிகனமழையும் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை முதல் அதிகனமழையும் ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளையைப் பொருத்தவரை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கனமழை முதல் அதிகனமழையும் தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல், கோயம்புத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
மீனவர்கள் குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தென் தமிழக கரையோர பகுதிகளுக்கு அடுத்த 24 மணிநேரத்திற்கும் கேரள கடலோரப்பகுதி லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த 2 நாட்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுத்தப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
Loading More post
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
“ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் இணையலாம்”- ரஜினி மக்கள் மன்றம்
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 447 பேருக்கு பாதகமான பக்க விளைவு: சுகாதார அமைச்சகம்
பழைய பஸ் பாஸ் மூலம் மாணவர்கள் பயணிக்கலாம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்