[X] Close >

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் பரவலாக இரு நாள்களுக்கு அதிகனமழை நீடிக்கும்!

The-northeast-monsoon-is-intense-says-Weather-Center

வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது என்றும், தமிழகத்தில் பரவலாக இரு நாள்களுக்கு அதிகனமழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில், “மன்னார்வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து அதே இடத்தில் நிலைகொண்டுள்ளது. புரெவி புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் பெரும்பாலன இடங்களில் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 36 செ.மீ, சிதம்பரத்தில் 34 செ.மீ மழையும் பெய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 11 இடங்களில் அதிகனமழையும் 20 இடங்களில் மிக கனமழையும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது.


Advertisement

image

வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இது இயல்பைவிட விட 2 சதவீதம் குறைவாக உள்ளது. நேற்று வரை 16 சதவீதம் குறைவாக மழை இருந்த நிலையில் தற்போது 2 சதவீதமாக குறைந்துள்ளது.

அடுத்துவரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், வேலூர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.


Advertisement

மன்னார் வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகளில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். மீனவர்கள் நாளை காலை வரை இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழை தொடரும். சில இடங்களில் கனமழையாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement
[X] Close