மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்கள் கட்டணத்தை திரும்பப் பெறலாம்: அதிமுக

AIADMK--Last-date-notice-for-withdrawal-of-nomination-fees-of-the-Corporation-and-Municipal-mayor-election

அதிமுகவில் மாநகராட்சி, நகராட்சி மேயர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வாய்ப்பு வேண்டி விருப்பமனு செய்திருந்தவர்கள், தங்கள் விண்ணப்ப கட்டணத்தை திருப்பிப்பெற இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


Advertisement

image

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெற இருந்த நிலையில் அதிமுகவில் மாநகராட்சி, நகராட்சி மேயர் மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு வாய்ப்பு வேண்டி  15.11.2019 முதல் விருப்பமனு செய்திருந்தனர்.


Advertisement

image

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் நடைபெறாத நிலையில், இதற்கான விருப்பமனு விண்ணப்ப கட்டணத் தொகையை அதிமுகவினர் தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று 21.11.2019 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மேற்கண்ட பதவிகளுக்கு விருப்பக் கட்டணம் செலுத்தி, அந்த தொகையை திரும்பப்பெறாதவர்கள் வருகின்ற 23.11.2020 முதல் 15.12.2020 வரை, தாங்கள் கட்டிய விருப்பமனு  கட்டணத்திற்கான தொகையை அசல் ரசீதுடன் தலைமை கழகத்திற்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் ,இந்த காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement