கணவன் இறந்த நிலையில் தனியாக வசித்த பெண்ணுடன் பழகி ஏமாற்றிய இளைஞரால் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொள்ளாச்சி தொழிற்பேட்டை கே.எல்.எஸ் நகர்பகுதியை சேர்ந்தவர் புவனேஸ்வரி (30). இவரது கணவர் ராமன், இவர் சென்னையில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ராமன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து புவனேஸ்வரி மற்றும் அவரது 13 வயது மகன் ஆகியோர் பொள்ளாச்சி தொழிற்பேட்டையில் உள்ள கேஎல்எஸ் நகர் பகுதியில் தனியே வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் புவனேஸ்வரிக்கு பேஸ்புக் மூலம் அறிமுகமான பொள்ளாச்சி சின்னாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தீன் (27) என்பவருடன் நற்பு ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறியது. பின்பு அவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என காஜா மொய்தீனிடம் புவனேஸ்வரி கூறியுள்ளார். அதனையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்நிலையில், புவனேஸ்வரி, காஜாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது கைபேசி எண் தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளதாகவும், புவனேஸ்வரியுடன் காஜா சரியாக பேசவில்லை என்றும் கூறப்படுகிறது. இதில் கலக்கம் அடைந்த புவனேஸ்வரி தற்கொலை செய்துகொள்ள போவதாக காஜாமொய்தீனின் செல்போனிற்கு எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
இதை பார்த்த காஜாமொய்தீன் தொழிற்பேட்டையில் உள்ள வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, புவனேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு காவல் நிலைய போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, பேஸ்புக் நண்பர் காஜா மொய்தீன் , புவனேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டினாரா அல்லது புவனேஸ்வரியே தற்கொலை செய்துகொண்டாரா என பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Loading More post
அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் பிரதமர் மோடி!
மீண்டும் ரூ.25 உயர்வு.. ராக்கெட் வேகத்தில் உயரும் LPG விலை: மக்கள் அதிர்ச்சி!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு: நள்ளிரவில் அமித்ஷாவுடன் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை
டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி