'கண்மூடித்தனமான பயம் இல்லை!' - பாஜக குறித்து அதிமுக கூட்டத்தில் பொங்கிய எடப்பாடி!

Booth-Women-s-Group-at-Every-Polling-Station-admk-Edappadi-Palanisamy-Strategy

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளில் ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதிமுகவைப் பொறுத்தவரை முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஜெயலலிதா இறப்புக்கு பின் வரும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இதுவாக உள்ளது.


Advertisement

இந்நிலையில் அதிமுக சார்பில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் வியூகம் குறித்தும், பாஜக குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து அதிமுக நிர்வாகி ஒருவர் நமது செய்தியாளருக்கு அளித்த தகவலின்படி,   

image


Advertisement

‘’நாம் இந்தியாவிலேயே எந்த அரசியல் கட்சியிலும் இல்லாத வகையில் உடனடியாக ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 25 பெண்கள் கொண்ட பூத் மகளிர் குழுவை அமைக்க வேண்டும் (தமிழ்நாட்டில் 67 ஆயிரத்து 678 வாக்குச்சாவடிகள் இருக்கிறது). இதை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதற்கான விண்ணப்பம் இப்பொழுது வழங்கப்படும். அந்த பூத் மகளிர் குழுவை உடனடியாக அமைத்து தலைமை கழகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசுடன் நாம் இணக்கமான உறவு கொண்டிருக்கிறோம். பாஜக அரசைப் பொறுத்தமட்டில் நாம் ஆட்சி அமைக்க உதவி செய்தார்கள். பதிலுக்கு நாமும் அவர்களுக்கு உதவி செய்தோம். அதைத் தவிர மத்திய அரசு நாம் கேட்ட நிதியை தரவில்லை என்ற குறை ஒரு பக்கம் இருக்கிறது. மற்றபடி கண்மூடித்தனமாக நாம் அவர்களுக்கு பயப்படுவதோ, அச்சப்படுவதோ இல்லை.

image


Advertisement

 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு நடந்தபோது ஒரு தொகுதி அவர்கள் மிக உறுதியாக கேட்டார்கள். நான் அது முடியாது என்று சொல்லி வெளிநடப்பு செய்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். நம்முடைய உரிமைகளை நாம் எப்போதும் விட்டுக் கொடுத்தது இல்லை.

இளைஞர், இளம்பெண்கள் பாசறை, பூத் மகளிர் குழு இப்போதே வாக்காளர்களை சந்தித்து பேச வேண்டும். வாக்காளர் சேர்ப்பு முகாம் நடக்கிறது. இதில் நிறைய வாக்காளர்களை சேர்க்க வேண்டும்’’ என்று எடப்பாடி பழனிசாமி பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement