வழிதவறி வந்த பசுமாடு: விற்று பணத்தை பங்குபோட்ட தலைமை காவலர்

The-cow-that-no-one-claimed-The-Head-Constable-who-sold-and-shared-the-money

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வழி தவறி வந்த பசுமாட்டை விற்ற தனிப்பிரிவு தலைமைக் காவலர் இடமாற்றம் செய்யப்பட்டார்.


Advertisement

 

image


Advertisement


கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்றை யாரும் உரிமை கோராததால் குன்னத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அந்த மாட்டை தனிப்பிரிவு தலைமை காவலர் ரங்கநாதன், 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்று அந்தப் பணத்தை ஆய்வாளர் மற்றும் ஓட்டுநருடன் பங்கிட்டுக் கொண்டதாக காவல்நிலைய வட்டாரத்தில் தகவல் பரவியது.

 

image


Advertisement


இந்த தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டலுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், தனிப்பிரிவு தலைமை காவலர் ரங்கநாதன், சேயூர் காவல் நிலையத்தில் காவல்நிலைய பணிக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதில் தொடர்புடைய மற்றவர்களும் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement