நடிகர் தவசியின் மருத்துவச் செலவுகளை சரவணன் எம்.எல்.ஏவே தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளார்
நான் கடவுள், ஜில்லா, வீரம், சுந்தரபாண்டியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் தவசி. கடந்த 2013 ஆம் ஆண்டு சிவக்கார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் சூரியின் அப்பாவாகதவசியின் 'கருப்பன் குசும்புக்காரன்' காமெடி ரசிகர்கள் மத்தியில் பிரபலம்
தற்போது, உணவுக்குழாய் புற்றுநோயோடு போராடும் தவசி தெற்கத்தி உடல்வாகும், முறுக்கிய மீசையுமாய் அந்த மண்ணுக்குரிய மொழியோடு திரையில் தோன்றுவது தமிழ் சினிமாவின் எல்லா ரசிகர்களுக்கும் பரிச்சயம். சமீப காலமாக உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சரவணனின் ’சரவணா’ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு மருத்துவச் செலவுகளை சரவணன் எம்.எல்.ஏவே தனது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டுள்ளார்
நகைச்சுவை நடிகர் #Thavasi அவர்களுக்கு எங்களது மருத்துவமனையில் உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம்.
புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம். pic.twitter.com/sL4B5ZE8SE — Dr.P.Saravanan MD.,MLA (@mdr_saravanan) November 16, 2020
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், டாக்டர் சரவணன் எம்.எல்.ஏ நகைச்சுவை நடிகர் தவசி அவர்களுக்கு எங்களது மருத்துவமனையில் உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம். புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அவரின் சேவையை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
Loading More post
சாலமன் பாப்பையா உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள்
மறைந்த பாடகர் எஸ்.பி.பி.க்கு பத்ம விபூஷண் விருது அறிவிப்பு
சசிகலா நாளை மறுநாள் விடுதலையாகிறார்: டிடிவி தினகரன்
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
கொரோனா பரவல் அச்சம்: குடியரசுதின கிராம சபைக் கூட்டம் ரத்து
'11.2 லட்சம் விவசாயிகளுக்கு PM-KISAN லாக்டவுன் நிதி செல்லவேயில்லை!'- ஆர்டிஐ சொல்வது என்ன?
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி
மென்மை டூ ஆக்ரோஷம்... சிவராஜ் சவுகான் 'முழு சந்திரமுகி'யாக மாறியதன் பின்னணி!
லாக்டவுனில் இந்திய டாப் செல்வந்தர்கள் வருவாய் 35% உயர்வு; வேலை இழப்போ பல லட்சம்: ஆக்ஸ்போம்