ஏப்ரல் மாதத்தில் கொரோனா தடுப்பூசி கிடைத்துவிடும்: டொனால்டு ட்ரம்ப்

covid-19-vaccine-will-get-april-month--donald-trump

கொரோனாவுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் மருந்து கிடைத்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Advertisement

 image

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளுக்குப் பின் முதல் முறையாக வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பைசர் நிறுவனம் ஆய்வு செய்து வரும் கொரோனா தடுப்பு மருந்து குறித்து பேசினார். அப்போது, அமெரிக்க மக்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கிடைத்துவிடும் என நம்பிக்கை தெரிவித்தார். மருந்து சந்தைக்கு வந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே சுகாதார பணியாளர்கள், முதியவர்கள், கவலைக்கிடமாக இருப்பவர்களுக்கு முதலில் வழங்கப்படும் எனக் கூறினார். தடுப்பு மருந்துக்கான கண்டுபிடிப்பில் தமது அரசு முதலீடு செய்திருப்பதால், பொதுமக்களுக்கு இலவசமாகவே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement