இனி இவர்களும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம்: கூடுதலாக 50 ரயில்கள் இயக்கம்

extra-50-electric-train-operated-in-chennai

சென்னையில் இருந்து விரைவு ரயிலில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளும், விமான நிலையம் செல்லக்கூடிய பயணிகளும் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

சென்னையில் "work man special" எனப்படும் புறநகர் சிறப்பு ரயில், அத்தியாவசிய பணியில் உள்ள அரசு உழியர்களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசிய பணியில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களும் இதில் பயணிக்க தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் விரைவு ரயில்களுக்காக எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் போன்ற ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பயணிகள் மற்றும் விமான நிலையம் செல்வோரும் றநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் 154 புறநகர் ரயில்களுடன், கூடுதலாக மேலும் 50 புறநகர் ரயில்கள் இயக்கப்படுகிறது.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement