வெளியானது ஜகமே தந்திரம் ‘புஜ்ஜி’ பாடல்: மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் தெறிக்கவிடும் தனுஷ்!

jagame-thaandhiram-bujji-song-release

 இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் இரண்டாவது பாடல் தீபாவளியையொட்டி  தற்போது வெளியாகி இருக்கிறது.


Advertisement

சஸ்பென்ஸ் த்ரில்லராக வெளியாகவிருக்கும் இப்படத்தின் ‘ரகிட ரகிட ரகிட’ பாடல் தனுஷ் பிறந்த நாளையொட்டி, கடந்த ஜூலை 28 ஆம் தேதி வெளியாகி வைரல் ஹிட் அடித்து தமிழர்களின் காலர் டியூன்களாகவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. விவேக் வரியில் தனுஷ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், அவரின் மகள் தீ உள்ளிட்டோர் இப்பாடலை பாடியிருக்கிறார்கள். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்கிறார். இப்படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் 9 ஆம் தேதி ‘புஜ்ஜி’ பாடல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ்.

image


Advertisement

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு புஜ்ஜி பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியுள்ளது. ”என்னை மட்டும் லவ் யூ சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் கிள்ளி வையி புஜ்ஜி, என்னை மட்டும் பாலோவ் பண்ணு புஜ்ஜி” காதலர்களின் ரொமான்ஸ் டியூன் ஆகியுள்ளது.

image

கேட்க பாப் சாங் போல் இருக்கும் இப்பாடலை சந்தோஷ் நாராயணனும் அனிருத்தும் போட்டிப்போட்டுக்கொண்டு பாடியுள்ளனர். பாப் பாடல் போல் இருப்பதால், தனுஷ் மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் மட்டுமல்ல நடனத்திலும் தெறிக்கவிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்பாடலை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement