"தியேட்டரிலேயே ரிலீஸ் ஆகியிருக்கலாமே!" - நெட்டிசன்கள் பார்வையில் 'சூரரைப் போற்று'

soorarai-pottru-reviews
ஓ.டி.டி.-யில் தீபாவளிப் பரிசாக வெளியாகியிருக்கும் 'சூரரைப் போற்று' படத்துக்கு சமூக வலைதளங்களில் மகத்தான வரவேற்பு கிடைத்துள்ளது. இது வழக்கமான கமர்ஷியல் படம்தான் என்று சிலர் சீரியஸாக விமர்சித்தாலும், உத்வேகமூட்டும் சினிமாவாக வந்திருப்பதாக பலரும் கொண்டாடி வருகின்றனர். அவர்களில் பலரது ஆதங்கமும்,  "தியேட்டரிலேயே ரிலீஸாகியிருக்கலாமே!" என்பதுதான். சூரரைப் போற்று படம் குறித்த நெட்டிசன்களின் பார்வையின் சிறு தொகுப்பு இங்கே...
 
FB/ கரிகாலன்:
 
"Praise the brave சூரரைப் போற்று; சூர்யாவையும் போற்று. An Inspiring tale with an magnificent Performance from Suriya Sivakumar பொருளாதார ஏற்றத்தாழ்வை மட்டுமல்ல, கொடிய சாதிய ஏற்றத்தாழ்வையும் உடைத்தெறிய விரும்புகிறேன் என்றொரு முத்திரை வசனம். சொந்த வாழ்க்கையில் சாதியை நிராகரித்த மனிதனாக இந்த வசனத்தை பேச எல்லா தகுதிகளும் கொண்டவர் மகிழச் செய்தாய் மாறா நெகிழச் செய்தாய்! 
 
சினிமாத்தனங்களைத் தாண்டியும் மனதில் நிற்கிறது படம். வானம் எல்லோருக்கும் வசப்படட்டும்! சென்சார் இல்லாத ஓடிடியால் சில சில கருவாட்டுக் காட்சிகளும் கறாரான வசனங்களும் தப்பி இருக்கின்றன. வேட்டையாடப் படுபவர்களெல்லாம் வீழ்ந்து விடுவதுமில்லை குத்திக் குதறப்படுபவர்களெல்லாம் நிலைகுலைந்து போவதும் இல்லை தங்கள் தகுதியால், திறமையால் திமிறி எழுவார்கள் வீறுகொண்டு நிற்பார்கள்."
 
image
 
FB/Dhivya Dhuraisamy:
 
"சூரரை போற்று ஓடிடில ரிலீஸ் ஆகிருக்கவே கூடாது... தியேட்டர்ல வந்துருந்தா மரண வெறித்தனமான இருந்துருக்கும்... தியேட்டர் தியேட்டர்தான். ரியல் #சூர்யா தீபாவளி!"
 
Twitter/அவுட் கார்த்தி:
 
"உழைக்கும் மக்களும், உழவர்களும் உயர வானூர்தியில் பறக்க வேண்டும் என வர்க்க வேறுபாடுகளுக்கு எதிராகச் சாட்டை சுழற்றி, லட்சியவெறி கொண்டு உழைத்தால் சாமானியனும் சாதனைப் படைக்க முடியும் எனும் நம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும் படமாக #சூரரைப்போற்று."
 
FB/Radha Manalan: 
 
"ஊர்ல அப்பா சாக கிடக்கிறார், ஃப்ளைட் டிக்கெட் காசுக்கு 6000 கம்மியா இருக்கும், அதுக்கு அப்புறம் படத்தில் நடக்கிற காட்சிகள் நம்மைப் பிழிஞ்சி எடுக்கும். எதோ ஒரு கட்டத்துல வாழ்க்கைல இதேமாதிரி நாம நின்னு இருப்போம்.
 
அதற்குப் பிறகு ஊருக்கு சென்று அம்மாகிட்ட சூர்யா அழும் காட்சிகள்... இது ரெண்டு மட்டும் போதும் இந்தப் படத்துக்கு!
 
image
 
FB/Rjsana Rjsana:
 
"தியேட்டர்ல ரிலீஸாகியிருந்தா, இன்னும் கொண்டாடியிருக்கலாம்..!"
 
Twitter/Balamurugan:
 
"சூரரைப்போற்று... இந்த திரைகதையை படமாக்கத் துணிந்த #சூர்யா அவர்களுக்கு நன்றிகள். வாழ்த்துகள். அத்தனைக்கும் ஆசைப்படு. பறப்பதற்கும் ஆசைபடு. கனவுகண்டால் அதை நிறைவேற்ற கடுமையான உழைப்பு அவசியம் என்பதை திரைபடம் வலியுறுத்துகிறது. திரையரங்கில் கொண்டாட வேண்டிய படம்."
 
FB/Sudharsan H:
 
 சூர்யா படம் பார்த்து இவ்வளவு நிறைவா ஃபீல் பண்ணி பல வருஷங்களாச்சு... வாரணம் ஆயிரம் வரைக்கும் சரி. பத்து பன்னெண்டு வருஷம் ஆச்சு... அதுக்கப்புறம் அந்த சூர்யா காணாமப் போயிட்டாரு. A proper come back for Surya and the man has proven what he is capable of...! நேத்து படம் பாக்கும்போதெல்லாம் யோசிச்ச விஷயம் இந்த சீனெல்லாம் தேட்டர்ல பாத்தா செம்மையா இருந்துருக்கும்லன்னு தான்..! \ \ 
 
கேப்டன் கோபிநாத்தின் உண்மைக் கதையோட ஒப்பிட்டு அறுத்து ஆராய்ச்சி பண்ணத் தேவையில்லைன்னு நினைக்கிறேன். அதெல்லாம் ஊரறிஞ்ச ரகசியம். Truth is (and always has been) stranger than fiction. அந்த ஒன்லைன் மட்டும் வெச்சுகிட்டு கதைல நிறைய மாற்றங்கள் செஞ்சு, சினிமாவுக்காக நிறைய நகாசு வேலை பண்ணி, முடிஞ்சளவு politically correctஆ, entertainingஆ சொல்ல முயற்சி பண்ணி அதுல வெற்றியும் பெற்றிருக்காங்க. \ \ I liked #SooraraiPottru...! \"
 
image
 
Twitter/Ravikumar R:
 
"சூரரைப் போற்று நேர்த்தியான படம். இசையும் வசனமும் மிரட்டல். தியேட்டரில் பார்த்திருந்தால் மிகச் சிறந்த அனுபவமாகியிருக்கும். சுதா கோங்கரா அவர்களின் எழுத்தும் இயக்கமும் அற்புதம். சூர்யாவின் நடிப்பு எவ்வளவுதான் பாராட்டினாலும் தகும். அமேசான் பிரைமுக்கு இந்தப் படம் ஒரு மணிமகுடம்."
 
FB/MG Adhavan:
 
"Soorarai Potru - வாழ்க்கையில ஜெயிக்கணும், ஊர்குருவியா இருந்தாலும் உயர பறக்க உழைக்கணும், பறந்து காட்டணும்! படம் முழுக்க கண்ணுல தண்ணி!! முடங்கி கிடக்குற என்னுடைய கனவுகளுக்கு உயிர் கிடைச்ச ஒரு நம்பிக்கை!!"
 
Twitter/Dinesh Madurai:
 
"நல்ல படத்துக்கு தியேட்டர் வேணும் அவசியமில்லை; மக்கள் மனதில் பதிந்தால் போதும்... அது நடந்தது."
 
FB/Revathy Ravikanth:
 
"சூரரை போற்று... நல்ல படம். பாருங்கைய்யா! (உலகத்துலேயே ஒரு வரி விமர்சனம்னா அது இதான்.)"
 
image
 
FB/மணி ஜி:
 
ஏர் டெக்கான் கோபிநாத் கதை. பாமரனுக்கும் விமான பயணம் சாத்தியம் என்றவர். இவரின் கதையை படமாக்க வேண்டுமென்றால் வெப் சீரிஸ்தான் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. ஹர்ஷத் மேத்தாவின் கதை சோனி லிவ்வில் பாருங்கள். அதிலும் கொஞ்சம் புனைவு இருக்கும். ஆனால், கொரோனாவை சானிடைசர் 99.9% ஒழிக்கும் என்பது போல், 99.9% உண்மையும் இருக்கிறது அந்த சீரிசில். 
 
கொஞ்சம் கூட மிகையில்லாத நடிப்பும் காட்சிகளும், ஆனால் சினிமாவாக்க வேண்டுமென்றால் சூர்யா தேவை. ஹீரோயிசம் தேவை. தன்னம்பிக்கை தடுப்பூசி தேவை. அபத்தமான மெலோட்ராமட்டிக் நெஞ்ச் நக்ஸ்கள் தேவை, சூ.போ-வில் ஏர்போர்ட் சீன் மாதிரி... ஆலையில்லாத ஊருக்கு இலுப்பை சர்க்கரை என்கிற மாதிரி. இல்லை காஞ்ச மாடு கம்பங்கொல்லையில் மேஞ்ச மாதிரியோ கொண்டாடி தீர்க்கிறார்கள். மகிழ்ச்சி. வழக்கமான படம்தான். தியேட்டருக்கு வந்திருந்தால் சூரசம்ஹாரம் நடந்திருக்கும். தயாரிப்பாளர் சூர்யாவின் முடிவு புத்திசாலித்தனமானதே.
 
FB/Preethi B:
 
"நம்பிக்கை தளராத நெடுமாறனும் நம்பிக்கை ஊட்டும் பொம்மியும் "
 
Twitter/தனிக்காட்டு ராஜா™:
 
"படத்துல டயலாக் சும்மா நெருப்பா இருக்கு. வசனம் - விஜயகுமார்."
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement