அமேசான் ப்ரைமில் வெளியானது சூரரைப் போற்று - சூர்யா ட்வீட்

Soorarai-Pottru-released-in-Amazon-Prime-surya-tweet

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரை போற்று' திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.


Advertisement

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள 'சூரரை போற்று' திரைப்படம் அக்டோபர் 30 ஆம் தேதி ஓடிடி தளமான அமேசான் ப்ரைமில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது. ஆனால், எதிர்பார்த்தப்படி இந்திய விமானத்துறையின் அனுமதி உடனடியாக கிடைக்காமல் தாமதமாக கிடைத்ததால் படத்தினை தீபாவளியொட்டி நவம்பர் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர், டீசர், போஸ்டர்கள் அனைத்தும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. படம் தொடர்பான ப்ரோமா வீடியோக்கள், மேக்கிங் வீடியோக்கள் படக்குழுவால் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. ஜிவி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.


Advertisement

இந்நிலையில், சூரரை போற்று திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அத்துடன் வீடியோ ஒன்றினையும் அவர் வெளியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement

Advertisement