இப்போதெல்லாம் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலை விட ஆன்லைனில் கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாகிவிட்டது. பணபரிவர்த்தனைகள் ஆன்லைன் உலகுக்குள் வந்தபின்னர் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. நேரம் மிச்சம் ஆகியுள்ளது. அதேவேளையில் ஆன்லைன் ஏமாற்றுக்காரர்களின் கைகளிலும் சிக்கியுள்ளது. பயனாளர்கள் மிகக்கவனமாக இருந்தால் மட்டுமே அவர்களிடம் இருந்து நம் பணத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலைதான் தற்போது உள்ளது.
நாக்பூரில் ஒரே போன்கால் மூலம் ரூ.9 லட்சத்தை இழந்துள்ளார் ஒருவர். கோரடி பகுதியில் வசித்து வரும் அசோக் மேன்வட் என்பவரின் செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார். அப்போது அசோக்கின் செல்போனை அவரது 15வயது மகன் பயன்படுத்தியுள்ளார். எதிர்முனையில் பேசிய மர்மநபர் டிஜிட்டர் பரிவர்த்தனை நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன்.
உங்கள் அப்பாவின் செல்போனில் நான் சொல்லும் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள் எனக் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய செயலியானது வேறொரு இடத்தில் இருந்து செல்போனை இயக்கும் ரிமோட் செயலி. செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்தவுடனேயே செல்போனுடன் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கில் இருந்து ரூ.9 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர் அந்த மர்மகும்பல். இது குறித்து அசோக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆன்லைன் மோசடி தொடர்பாக புகாரை பதிவுசெய்துள்ள போலீசார் மோசடி கும்பலை தீவிரமாக தேடு வருகிறது
Loading More post
“14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்” - நடராஜனுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
புனே: கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் திடீர் தீவிபத்து
பேரறிவாளன் விடுதலையில் 3-4 நாள்களில் ஆளுநர் முடிவு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
தொண்டர்களை பார்த்து கைகளை அசைத்த சசிகலா - வீடியோ!
டாஸ்மாக்கில் ரசீது கொடுக்க வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
இந்தியக் குடும்பங்களில் சுரண்டப்படும் பெண்களின் உழைப்பு - ‘தி கிரேட் இண்டியன் கிச்சன்’
10 கட்ட பயிற்சிகளை முடித்த தேனி மாணவி: விண்வெளி கனவுக்கு தடைபோடும் நிதிச் சுமை!
'Is Love Enough? Sir' - காதலில் காசு ஒரு பொருட்டே இல்லைன்னு யார் சார் சொன்னது?!
மனிதர்கள் செய்த கொடுமை... 40 லிட்டர் ரத்தம் வெளியேற்றம்... சோர்வடைந்து இறந்த காட்டு யானை!