ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் பயமில்லா கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று டெல்லி அணியின் ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டொய்னிஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டாவது இறுதிப் போட்டியாளரை தீர்மானிக்கவுள்ள QUALIFIER TWO போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இது குறித்து பிடிஐக்கு பேட்டியளித்துள்ள ஸ்டொய்னிஸ் "இப்போது நாங்கள் சிறப்பாக விளையாடுகிறோம். இன்றையப் போட்டியில் நாங்கள் பயமில்லா கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும். இது எங்களுக்கு சரியான தருணமாக பார்க்கிறேன். இந்த ஐபிஎல் தொடரில் பல அணிகள் ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து சந்தித்துதான் வருகிறது. இந்த ஒரு போட்டியில் வெற்றிப்பெற்றுவிட்டால் நாங்கள் இறுதிப் போட்டியில் இருப்போம்" என்றார்.
மேலும் "ஐபிஎல் பைனலுக்கு சென்றுவிட வேண்டும் என்பதுதான் இப்போது எங்களுக்கு இருக்கும் ஒரே உத்வேகம். ஹைதராபாத்தை பொறுத்தவரை ரஷீத் கான் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அவரை ஜாக்கிரதையாக எதிர்கொண்டு விளையாட வேண்டும். பேட்டிங்கை பொறுத்தவரை வார்னர், வில்லியம்சன் ஹைதராபாத்துக்கு தூணாக இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மனதில் வைத்துதான் இன்றைய ஆட்டத்தில் களம் காண்கிறோம்" என்றார் ஸ்டொய்னிஸ்.
Loading More post
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களை எல்லாம் கொடுத்துவிட முடியாது -ஆர்.எஸ்.பாரதி
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
வாஷிங்டன் சுந்தர் அரை சதம் - 2ம் நாள் முடிவில் இந்திய அணி 294 ரன்கள் குவிப்பு
25 தொகுதிகளாவது ஒதுக்கினால்தான் கையெழுத்து: தேமுதிக திட்டவட்டம்