”இன்னும் எத்தன வருடம் காரணம் சொல்வீங்க.. கோப்பை எங்கே ?” கோலி மீது காம்பீர் காட்டம் !

Sport-is-all-about-delivering-Gautam-Gambhir-slams-Virat-Kohli

இந்தியாவுக்கு கேப்டனாக இருந்தால் என்ன கோலியால் பெங்களூருக்கு வெற்றியை தேடி தர முடியவில்லையே என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Advertisement

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றுப் போட்டியில் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது பெங்களூர். இதனால் ஐபிஎல் தொடரிலிருந்து பெங்களூர் வெளியேறியது. இந்நிலையில், கொல்கத்தா அணியின் முன்னாள் கேப்டன் கவுதம் காம்பீர் ஈஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்துக்கு பேசியுள்ளார்.

அதில் "எத்தனை காலத்துக்குதான் பிளே ஆஃப்க்கு தகுதிப்பெற்றுவிட்டோம் என கூறிக்கொண்டே இருக்க முடியும். என்னை பொறுத்தவரை ஆர்சிபி அணி பிளே ஆஃப்க்கு தகுதிப்பெற தகுதியில்லாத அணியாகவே பார்க்கிறேன்" என்றார்.


Advertisement

image

மேலும் "ஐபிஎல் தொடரின் கடைசி 5 போட்டிகளில் ஆர்சிபி தோல்வியடைந்ததையும் நாம் மறுக்க முடியாது. இந்தத் தொடரில் ஆர்சிபிக்கு நவ்தீப் சைனி மட்டுமே சிறப்பாக விளையாடி இருக்கிறார். எனக்கு தெரிந்தவரையில் வேறு எந்த வீரரும் இந்தத் தொடரில் ஆர்சிபிக்கு சிறப்பானவராக தோன்றவில்லை.

8 ஆண்டுகள் என்பது சாதாரண விஷயமல்ல. கோலிக்கு அனுபவமில்லை என கூறவில்லை. இந்தியாவுக்கு கேப்டனாக இருக்கிறார். எந்த அணிக்கு விளையாடினாலும் அவர்தான் கேப்டன். இவையெல்லாம் சரிதான். ஆனால் கிரிக்கெட்டை பொறுத்தவரை நீங்கள் வெற்றியை கொடுக்க வேண்டும். அதான் விளையாட்டில் முக்கியம்" என்றார் கவுதம் காம்பீர்.


Advertisement

image

மேலும் பேசிய அவர் "கோலி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அப்படி முடிவு செய்திருந்தால் தொடரின் முதல் போட்டியிலிருந்தே அவர் தொடக்க வீரராக விளையாடி இருக்க வேண்டும். அப்படி முன்கூட்டிய திட்டமிட்டுருந்தால் அதற்கேற்ப மிடில் ஆர்டரை தயார் செய்திருக்க வேண்டும். ஆனால் வழக்கம்போல இந்தத் தொடரிலும் கோலியும், டிவில்லியர்ஸூம்தான் பல நேரங்களில் அணியை காப்பாற்றினர்" என்றார் காம்பீர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement