நியூசிலாந்தில் இரண்டாவது முறையாக எம்.பியாக தேர்வாகியுள்ள பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சரவையில் மலையாளத்தில் பேசிய பழைய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரியங்கா ராதாகிருஷ்ணன்(41), சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்தவர். நியூசிலாந்து நாட்டிற்கு குடிபுகுந்த இவர் அங்கு தனது கல்லூரிப் படிப்பை முடித்து ஆக்லாந்தில் இந்திய மக்களிடையே சமூக சேவகராக செயல்பட்டு வந்தார்.
2006ஆம் ஆண்டு நியூசிலாந்து தொழிலாளர் கட்சியில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிய அவர், 2014ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மீண்டும் 2017இல் போட்டியிட்டு எம்.பி ஆனார்.
Doing India proud, the Indian origin minister in New Zealand @priyancanzlp addresses her country's parliament in Malayalam.@IndiainNZ @NZinIndia @VMBJP @MEAIndia pic.twitter.com/f3yUURW2Em — Hardeep Singh Puri (@HardeepSPuri) November 5, 2020
தற்போது அவர் இரண்டாவது முறையாக வெற்றிபெற்றுள்ளார். அவர் 3 வருடங்களுக்கு முன்பு நியூசிலாந்து அமைச்சரவையில் மலையாளத்தில் பேசிய வீடியோ ஒன்றை இந்தியாவின் மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தற்போது பகிர்ந்துள்ளார்.
இவ்ளோ நீள முடியா....? கின்னஸ் சாதனை படைத்த இளம்பெண்...!
இந்திய நாட்டை பெருமைப்படுத்தும் விதமாக, இந்தியாவை பூர்விகமாகக் கொண்ட அமைச்சர் நியூசிலாந்து அமைச்சரவையில் மலையாளத்தில் பேசியுள்ளார் என்று அவர் குறிப்பிட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?