தேர்தல் போராட்டத்தில் காவல் அதிகாரியின் முகத்தில் துப்பிய பெண்- வீடியோ

US-election-female-protester-spits-on-Police-officer-got-arrested

அமெரிக்காவில் தேர்தல் போராட்டத்தில் காவல் அதிகாரியின் முகத்தில் துப்பிய 24 வயது பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.


Advertisement

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், அதிபர் ட்ரம்ப் தான் வெற்றிபெற்றதாகக் கூறி தேர்தல்முடிவை நிறுத்துமாறு கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மான்ஹேட்டனில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தேவினா சிங் என்ற 24 வயது பெண், ஒரு காவல் அதிகாரியிடம் தவறாக பேசியதுடன், அவருடைய முகத்தில் துப்பியதால் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர். இந்த வீடியோ இணையங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement

அந்தப் பெண் பேசியதில் சில வார்த்தைகள் சரியாக புரியவில்லை என்றாலும், காவல் அதிகாரியின் முகத்தில் துப்பியவுடன் சுற்றி நின்ற போலீஸார் அந்தப் பெண்ணை தரையில் தள்ளி கைது செய்துள்ளனர். இந்த வீடியோ ட்விட்டரில் வைரலாகிய சிறிது நேரத்திலேயே என்.ஒய்.பி.டி மற்றும் போலீஸ் சங்கங்கள் அந்தப் பெண்ணின் செயலுக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் வார்த்தைகளையே வைத்து அவரை கேலிசெய்த கிரேட்டா தன்பெர்க் 


Advertisement

’’இதுபோன்ற செயல்களை சகித்துக்கொள்ள முடியாது. கிளர்ச்சி செய்பவர்கள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டால் உடனடியாக கைது செய்யப்படவேண்டும்’’என என்.ஒய்.பி.டி ட்வீட் செய்துள்ளது.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement