எஸ்.ஏ சந்திரசேகர் தொடர்ந்த வழக்கு... தயாரிப்பாளருக்கு 3 மாதம் சிறை

Producer-Appachan-jailed-for-3-months-in-cheque-fraud-case

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொடர்ந்த செக் மோசடி வழக்கில் அழகிய தமிழ் மகன் திரைப்பட தயாரிப்பாளர் அப்பச்சனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


Advertisement

கடந்த 2007ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான அழகிய தமிழ்மகன் திரைப்படத்தை ஸ்வர்க்க சித்ரா நிறுவன உரிமையாளர் அப்பச்சன் தயாரித்திருந்தார். இப்படத்தின் வெளியீட்டுக்காக விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 15 நாளில் திருப்பி தருவதாக கூறி அப்பச்சன், ஒரு கோடி ரூபாய் கடனாக பெற்றதாகத் தெரிகிறது. இந்த கடனுக்காக அப்பச்சன் கொடுத்த காசோலை வங்கிக் கணக்கில் பணமில்லாமல் இரண்டு முறை திரும்பி வந்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் அப்பச்சன் மீது சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செக் மோசடி வழக்கு தொடர்ந்திருந்தார்.

கமல்ஹாசனின் அரசியல் மீது மிகுந்த மரியாதை உள்ளது: சூர்யா 


Advertisement

தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல்ராஜ், அப்பச்சனுக்கு 3 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கு தான் கடனாகப் பெற்ற ஒரு கோடி ரூபாயை திருப்பித் தரவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement