கோரிக்கை வைத்த ட்விட்டர்வாசி... வேடிக்கையான பதிலளித்த சோனுசூட்

Sonu-Sood-has-hilarious-reply-for-man-who-asked-him-to-arrange-for-a-Maldives-vacation--Cycle-or-rickshaw

விடுமுறை பயணத்துக்காக மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல போக்குவரத்து ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை வைத்த நபருக்கு வேடிக்கையாக பதிலளித்துள்ளார் சோனுசூட்.


Advertisement

image

நடிகர் சோனுசூட்டிற்கு ஒரு நபர் ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “ நான் விடுமுறைக்காக மாலத்தீவுக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதி செய்துத்தரவேண்டும்” எனக் கேட்டுள்ளார். இதற்கு வேடிக்கையாக பதிலளித்த சோனுசூட் “ ரிக்சா வேண்டுமா அல்லது சைக்கி்ள் வேண்டுமா?” என்று பதிலளித்துள்ளார்.


Advertisement

கொரோனா நெருக்கடியில் பல்வேறு உதவிகளை செய்துவருகிறார் பாலிவுட் நடிகர் சோனுசூட். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளிலும் , வெளிமாநிலத்திலும் சிக்கித்தவித்த ஏராளமான இந்தியர்களுக்கு உதவிசெய்து நாடு திரும்ப உதவினார். மேலும் ட்விட்டர் மற்றும்  சமூக வலைத்தளங்கள் மூலமாக இவரிடம் உதவி கேட்கும் பலருக்கும் உதவி செய்துவருகிறார். பலருக்கு வாழ்வாதார பொருட்களையும், வேலைவாய்ப்பையும் பெற்றுத்தந்துள்ளார். இவரின் செயல் விளம்பரத்திற்கானது என்று பலர் விமர்சனம் செய்துவருகின்றனர், சில நேரங்களில் இவர் இதுபோன்ற வேடிக்கையான கேள்விகளையும் எதிர்கொண்டுவருகிறார்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement