இலங்கை கடற்படை அட்டூழியம்: 4 மீனவர்கள் கைது

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.


Advertisement

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடிக்கடி தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. இந்நிலையில், நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ராமேஸ்வரத்தை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது படகையும் பறிமுதல் செய்தனர்.

முன்னதாக, கடந்த 3 தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 8 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டது குறிப்படத்தக்கது. 


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement