ரியல் எஸ்டேட் அதிபர் வெட்டிக்கொலை... முன்விரோதமா என போலீஸ் விசாரணை

Real-estate-owner-killed-by-unknown-persons

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார். பணி நிமித்தமாக இவர் தமது இருசக்கர வாகனத்தில் பொன்னேரி நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறார். இலவம்பேடு அருகே காரில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று சரவணனை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் சாலையில் துடிதுடித்த சரவணனை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்துள்ளார்.

image


Advertisement

இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement