பெங்களூரு டூ சென்னை... லாரியில் கடத்தப்பட்ட ரூ. 30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்

Gutka-worth-Rs-30-lakh-seized

வேலூர் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 30 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்... ஒருவரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 


Advertisement

image

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா மற்றும் பான்மசாலா ஆகியவற்றை பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்த இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே பள்ளிகொண்டா காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனார்.


Advertisement

 

image


அப்போது பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி வந்த கண்டெய்னர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் மூட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அதை பறிமுதல் செய்த பள்ளிகொண்டா காவல்துறையினர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கண்டெய்னர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.


Advertisement

மேலும் குட்கா கடத்தி வந்த மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த அழகுராஜா (28) என்பவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் 30 லட்சம் இருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement