முத்தையா முரளிதரனின் 800வது விக்கெட் யார் தெரியுமா?

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளர் என்ற மைல் கல்லை எட்டியவர். 


Advertisement

image

இன்று வரை ஒரு பவுலரால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய சாதனையாகவும் அதுவே உள்ளது. அவரது வாழ்க்கை படத்தை ‘800’ என்ற தலைப்பில் திரைப்படமாக எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.


Advertisement

image

இந்நிலையில் அது தமிழகத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் முரளிதரனின் 800வது விக்கெட் யார்? என்பதை பார்ப்போம். இலங்கை அணிக்காக 133 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் முரளிதரன். கடந்த 1992இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுக வீரராக களம் இறங்கினார். தொடர்ந்து 2010 வரை ஆக்டிவாக இலங்கைக்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடினார். 

டெஸ்ட் போட்டிகளில் அசராமல் பல மாரத்தான் ஸ்பெல்களை வீசியவர். ஆஸ்திரேலியாவின் CRAIG McdERMOTT தான் முரளிதரனின் முதல் டெஸ்ட் விக்கெட். அப்போதிலிருந்து தொடர்ச்சியாக 800 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


Advertisement

image

கடந்த 2010இல் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது இந்திய அணி. அந்த சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்தியாவின் இடது கை பேட்ஸ்மேன் பிராகைன் ஓஜாவை OFF பிரேக் டெலிவரி வீசி எட்ஜான பந்தை ஜெயவர்தனே பிடித்தார். அதன் மூலம் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் முரளிதரன். 

image

அந்த ஆட்டத்தில் இலங்கை அணி பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.    

 

loading...

Advertisement

Advertisement

Advertisement