புள்ளிகள் பட்டியலில் முந்துவது யார் ? ராஜஸ்தானுடன் மல்லுக்கட்டும் பெங்களூரு

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

கடைசியாக விளையாடிய போட்டிகளில் சறுக்கலைச் சந்தித்துள்ள பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.


Advertisement

சீசனின் முதல் பாதியில் களமிறங்கிய முதல் இரு போட்டிகளில் அசத்தலான வெற்றிகளைப் பதிவு செய்து மிரட்டிய ராஜஸ்தான் அணி, அதன் பின்பு விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்துள்ளது. பேட்டிங்கில் ஸ்மித், சாம்சன் ஆகிய தூண்கள் ஃபார்மை இழந்து சரிந்துள்ளன. ஸ்டோக்ஸ், பட்லர், உத்தப்பா ஆகியோரின் ஆட்ட வெளிப்பாடுகள் சற்றே ஆறுதல் அளிக்கின்றன.

 மத்திய வரிசையில் திவேதியா மற்றும் ரியான் பரக் நம்பிக்கையளிக்கின்றனர். பந்து வீச்சில் ஜோஃப்ரா ஆர்ச்சர் அணியின் பலமான அஸ்திரமாக உள்ளார். இளம் வீரர் கார்த்திக் தியாகியின் வேகம் அணிக்கு பக்கபலம். உனத்கட் விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் ரன்களை வாரி இறைப்பது பலவீனமே. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியை தவறான வியூகங்களால் கோட்டை விட்ட ஏமாற்றத்தில் உள்ளது பெங்களூரு அணி.


Advertisement

தொடக்க வீரர்கள் ஃபின்ச், படிக்கல் ஆகியோர் வலுவான தொடக்கத்தை தருவதிலிருந்து சறுக்கியுள்ளனர். கடந்த இரு போட்டிகளில் கேப்டன் கோலி அதிரடியாக ரன் சேர்க்க திணறியுள்ளது பின்னடைவே. டிவ்லியர்ஸ், தூபே ஆகியோர் மத்திய வரிசை நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். ஆல்ரவுண்டர்கள் சுந்தர், மோரிஸ் இருவரும் பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் போதுமான பங்களிப்பை நல்கி வருகின்றனர்.

image

சைனி, சிராஜ், உதானா ஆகியோர் வியக்கத்தக்க ஆட்டங்களைக் கொடுக்கத் தவறி வருகின்றனர். முக்கிய கட்டங்களில் விக்கெட்டை வீழ்த்தும் சுழல் சூத்திரதாரி சாஹல் மட்டுமே MIDDLE OVERகளில் நம்பிக்கையளிக்கிறார்.இரு அணிகளும் வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளதால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement