எப்படி ரூ.1570 கோடி திரட்ட முடியும்?: சூரப்பாவுக்கு தமிழக அரசு கேள்வி

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அண்ணா பல்கலைக்கழகத்தால் எப்படி ரூ.1570 கோடி திரட்ட முடியுமென சூரப்பாவுக்கு தமிழக அரசு கேள்வி எழுப்பியுள்ளது


Advertisement

மத்திய அரசுக்கு தன்னிச்சையாக கடிதம் எழுதியதாக எழுந்த சர்ச்சை குறித்து விளக்கம் அளித்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா “உயர்நிலை சிறப்பு தகுதி கிடைத்தால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதி பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடர்பு போன்ற பல வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

image


Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தால் வருடத்திற்கு ரூ.1570 கோடி நிதி திரட்ட முடியும் என்றும் சூரப்பா குறிப்பிட்டார். ஒவ்வொரு ஆண்டும் ரூ.314 கோடி திரட்ட முடியும் என தமிழக அரசுக்கு சூரப்பா கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தால் எப்படி ரூ.1570 கோடி திரட்ட முடியும் என சூரப்பாவுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. எவ்வாறு நிதி திரட்ட முடியுமென கடிதத்தில் தமிழக அரசு கேள்வி எழுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement