ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வகுத்த வித்தியாசமான வியூகங்கள்...
நடப்பு சீசனில் அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு, அணியையே மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தது சென்னை அணி. கேப்டன் தோனியோ சென்னை அணி என்னும் கப்பலில் பல ஓட்டைகள் உள்ளது என கூறியிருந்தார். அதிரடி காட்டாமல் தத்தளிப்பதை விட 17 ஓவர்களில் ஆல் அவுட் ஆனாலும் விளாசுவதே மேல் என்னும் கருத்தையும் அவர் கூறியிருந்தார். அதன் வெளிப்பாடு ஹைதராபாத்க்கு எதிரான போட்டியில் தென்பட்டது. அதற்கான முனைப்பை டாஸ் இல் இருந்தே காட்டியது.
சேஸ் செய்வதையே வழக்கமாகக் கொண்ட கேப்டன் தோனி டாஸ் வென்று நடப்பு சீசனில் முதல் முறையாக பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரராக அனுபவ வீரரான வாட்சனுக்கு பதிலாக இளங்கன்று சாம்கரணை, டூபிளசியுடன் களமிறக்கினார் தோனி. அந்த நகர்வு வெற்றிகரமாகவும் அமைந்தது.
பேட்டிங்கில் ஓட்டை எனக் கூறியிருந்த தோனி, நேற்றைய போட்டியில் ஜெகதீசனுக்கு பதிலாக, பந்து வீச்சாளரான சாவ்லாவை ஆடும் லெவனில் சேர்த்தார். 3 சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் எடுக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியே. ஆனால் இரண்டாம் இன்னிங்ஸில் ஆடுகளம் சுழற்பந்துக்கு ஏதுவாக அமைந்திருந்தது மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருந்தது. அச்சுறுத்திய பேட்ஸ்மேன்களான பேர்ஸ்ட்டோவ், வில்லியம்சன், பிரியம் கார்க் ஆகியோர் சுழற் பந்துகளில் வீழ்ந்ததே அதற்கு சான்று.
இனி வரும் போட்டிகளிலும் இதே போன்ற பல வியூகங்களை வகுத்து சென்னை அணி வாகை சூடுமா என்பதே நடப்பு சீசனின் உச்சகட்ட எதிர்பார்ப்பு.
Loading More post
'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் முதல்வர் வேட்பாளர் இல்லை: கேரளா பாஜக தலைவர் 'திடீர்' பல்டி!
திமுக - காங்., அதிமுக - தேமுதிக தொகுதிப் பங்கீட்டில் நீடிக்கும் சிக்கல்... என்ன நடக்கிறது?
புதுச்சேரி: என்.ஆர். காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கிறதா மக்கள் நீதி மய்யம்?
கூட்டணி சிதைவடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது திமுக பொறுப்பு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு?
'நல்ல நாள்', 'சமூக நீதி' - முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்... அதிமுக 'முந்தியது' ஏன்?
கேரளாவில் கட்சி மாறும் நிர்வாகிகள்... சமூக நீதியை உறுதிப்படுத்த தவறியதா காங்கிரஸ்?!
ஒதுங்கிய சசிகலா... தேர்தலில் எடுபடுமா தினகரன் வசமுள்ள 3 வியூகங்கள்?!
அப்பாஸ் சித்திக்: மேற்கு வங்க அரசியலின் புது வரவு... யாருக்கு லாபம்?