தொடக்க வீரராக களமிறங்கிய சாம் கர்ரன் : தோனி போட்ட கணக்கு..!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக ஆல்ரவுண்டர் சாம் கர்ரன் களமிறக்கப்பட்டார்.


Advertisement

ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் தோனி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இதுவே முதல் முறையாகும்.

image


Advertisement

இந்த திடீர் மாற்றத்தை அனைவரையும் சிந்தித்து முடிப்பதற்குள், சென்னை அணியின் தொடக்க வீரராக சாம் கர்ரனை களமிறக்கி அடுத்த அதிரடியை காட்டியிருக்கிறார். தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம் கர்ரன் 21 பந்துகளில் 31 ரன்களை குவித்துவிட்டு விக்கெட்டை இழந்தார். இதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.

தொடக்கத்தில் சென்னை அணி மந்தமாக விளையாடுவதே, பின்னாள் வரும் வீரர்களுக்கு அழுத்தம் கொடுப்பதை உணர்ந்து தோனி இந்த முடிவை எடுத்திருக்கலாம். கொல்கத்தா அணியில் சுனில் நரைனை எப்படி பயன்படுத்தினார்களோ அப்படி இவரையும் பயன்படுத்த திட்டமிட்டிருக்கலாம். அதிரடியாக விளையாடி சில சிக்ஸர், பவுண்டரிகளை விளாசி குறைந்தபட்சம் 30 ரன்கள் எடுத்தால் போதும் என தோனி நினைத்திருக்கலாம். அவர் போட்ட கணக்குபடி சிக்ஸர்களை பறக்க விட்டார் சாம் கர்ரன்.

ஆனால், டுபிளசிஸ் விக்கெட்தான் எதிர்பாராதது. அதுவும் சந்தித்த முதல் பந்திலே டக் அவுட். சென்னை அணி 35 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது.


Advertisement
loading...

Advertisement

Advertisement

Advertisement