90 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவின் மைனே தீவில் பிறந்த குழந்தை.!

Baby-born-on-Maine-island-for-1st-time-in-more-than-90-years

அமெரிக்காவின் மைனே தீவில் இரு வாரங்களுக்கு முன்பு ஆரோன் கிரே மற்றும் எரின் பெர்னால்ட் கிரே தம்பதியினருக்கு குழந்தை பிறந்துள்ளது. 90 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தீவில் குழந்தை பிறந்துள்ளது


Advertisement

 image

இரண்டு வாரங்களுக்கு முன்பு மைனே தீவில் பிறந்த இந்த குழந்தைக்கு அசேலியா பெல்லி கிரே என்று பெயரிட்டுள்ளனர். இந்த குழந்தையின் பெற்றோர் மைனே கடற்கரையிலிருந்து மிகப் பெரிய தீவான மவுண்ட் டெசர்ட் தீவுக்குச் செல்ல தற்செயலான திட்டங்களை வகுத்திருந்தனர். அங்கே குழந்தையை பெற்றுக்கொள்வதற்கான திட்டமும் அவர்களிடம் இருந்தது. இவை எல்லாம் செப்டம்பர் 26 ஆம் தேதி சீராக நடந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.


Advertisement

கால்வின் கூலிட்ஜ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்ததிலிருந்து இந்த மைனே தீவில் யாருக்கும் குழந்தை பிறக்கவில்லை. 1927 ஆம் ஆண்டில்தான் கடைசியாக இங்கு குழந்தை பிறந்ததாக சொல்லப்படுகிறது. “எனது குழந்தை  அசாலியாவின் பிறப்புக்குப் பிறகுதான், மைனே தீவில் கடைசியாக பிறந்த நபர் 2005 ஆம் ஆண்டில் இறந்துவிட்டார் என்பதை அறிந்துகொண்டேன்” என எரின் பெர்னார்டு கிரே தெரிவித்தார்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement