மாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்து தொங்கிய சிறுவன்... லாவகமாக செயல்பட்ட வியாபாரி

The-boy-who-hung-on-the-wall-of-the-floor-handle-----Stirred-by-the-viral-video----

ஆபத்தான நிலையில் மாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்து தொங்கிய 4 வயது சிறுவன். கூக்குரல் எழுப்பி சிறுவனை காப்பாற்றிய வியாபாரி. வலைதளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. 


Advertisement

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இளங்காகுறிச்சியைச் சேர்ந்தவர் முகமதுஷாலிக் (41). இவர் ஓம வாட்டர், பினாயில், ஆசிட், பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்று கிராமப்புறங்களில் விற்பணை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த செவ்வாய் கிழமை இருசக்கர வாகனத்தில் ஓந்தாம்பட்டி, பழையகோட்டை, வீரப்பூர் சந்தைப்பேட்டை, பூலாம்பட்டி வழியாக தோப்புப்பட்டி என்ற இடத்தில் சாலையில் வரும்போது அங்குள்ள ஒரு வீட்டின் மாடியில் இருந்து காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று சிறுவனின் கூக்குரல் கேட்டுள்ளது.


Advertisement

அதனைத் தொடர்ந்து உடனடியாக முகமதுஷாலிக் வண்டியை நிறுத்திவிட்டு சென்று பார்த்தபோது அந்த வீட்டின் மாடியின் கைப்பிடி சுவற்றை பிடித்துக் கொண்டு வெளியே தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை பார்த்து அதிர்ச்சியடைந்தார். 6 வயது மதிக்கத்தக்க சிறுவனின் சகோதரி மேலிருந்து சிறுவனின் கையை பிடித்து கொண்டிருந்தாலும் அவனை மேலே தூக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்துள்ளார். 

image

 பின்னர் முகமதுஷாலிக் சிறுவன் தொங்கிய இடத்தின் கீழே நின்று கொண்டு சிறுவனின் கையை விடுமாறு அவரது சகோதரியிடம் கூறியுள்ளார். அச்சிறுமி சிறுவனின் கையை விட்டபோது கீழே நின்ற முகமதுஷாலிக் லாவகமாக சிறுவனை கீழே விழாமல் பிடித்து காப்பற்றியுள்ளார். இதனை அங்கிருந்தவர்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.


Advertisement

குழந்தைகளின் பெற்றோர் வேலைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றபோது, வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சுவற்றில் தொங்கியுள்ளான். அந்த சிறுவனை காப்பாற்றிய வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்தவர்கள் சிறுவனை காப்பாற்றிய வியாபாரிக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement