திருடப்பட்டு மீண்டும் விற்பனையா? - சென்னையில் அதிகரிக்கும் காலணி திருட்டு

Shoe-theft-on-the-rise-in-Chennai

பணம் நகைகளை கொள்ளையடித்து வரும் திருடர்களுக்கு மத்தியில், தற்போது சென்னை நகரில் வீடுகளுக்கே சென்று காலணிகளை திருடும் கும்பல் அதிகரித்துள்ளது.


Advertisement

செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு, வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது என்றுதான் குற்றங்களின் வகைகளை பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் விலை உயர்ந்த காலணிகளை குறி வைத்து திருடும் கும்பல் பற்றிய புகார், சமீபத்தில் சென்னை நகரில் புதிதாக முளைத்துள்ளது. அட காலணிகளையும் விட்டு வைக்க மாட்டீங்களா என்கிற ரேஞ்சில் இந்த காலணி திருடு போகும் புகார்கள் அதிகரித்து வருகிறது.

image


Advertisement

சூளை பகுதியிலுள்ள, வெங்கடாசலம் தெருவில் வசித்து வரும் சந்தானம் என்பவரது வீட்டில், கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஷூ ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த 3 ஜோடி புதிய காலணிகள் காணாமல் போயுள்ளன. இவரது குடும்பத்தினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு பார்த்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பட்டப்பகலில் இவரது வீட்டு வாசலில் உள்ள காலணிகளை திருடி பாலீத்தீன் பைகளில் போட்டு எடுத்து செல்வது தெரியவந்தது.

சந்தானத்தின் வீட்டில் காலணி திருடு போவது இது முதல் முறை இல்லை. ஏற்கனவே இரண்டு முறை இவரது வீட்டில் இதே போல திருட்டு நடந்ததால் அது தொடர்பாக பெரியமேடு போலீசில் சந்தானம் புகார் அளித்துள்ளார். கடந்த 2 மாதங்களில் பெரியமேட்டில் உள்ள வீடுகளிலும் அடுக்குமாடி, குடியிருப்புகளிலும் தொடர்ச்சியாக காலணிகளை திருடிச் செல்லும் சம்பவம் நடைபெற்று வருவதாக சந்தானம் கூறுகிறார்.

image


Advertisement

குறிப்பாக, வேப்பேரி, பெரியமேடு ஆகிய இடங்களில் காலணிகளை விற்பனை செய்யும் கடைகள் அதிகம் இருக்கும் என்பதால், புதிய காலணிகளை திருடி அப்பகுதிகளில் உள்ள சில கடைகளில் விற்று, அதன் மூலம் திருடர்கள் சம்பாதித்து வருவதாகவும் அப்பகுதி‌ மக்கள் தெரிவித்துள்ளனர். நகை, பணம் திருட்டு குறித்து விசாரிக்கும் காவல்துறையினருக்கு, காலணிகளை திருடும் கும்பலை பிடிப்பது தற்போது சவாலானதாகவே மாறியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement