அழுதுகொண்டே வீடு வந்த 4 வயது சிறுமி... விசாரித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி

4-year-old-girl-sexually-harassed-----50-year-old-man-arrested-under-Pokcho-Act-----

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே M.ரெட்டியாபட்டியில் 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த 50 வயது நபரை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். 


Advertisement

image

அருப்புக்கோட்டை அருகே ஆ.ரெட்டியாபட்டி லட்சுமிபுரத்தை சேர்ந்த லட்சுமணபெருமாள், சிந்துஜா தம்பதியர் நான்குவயது சிறுமி தினமும் அக்கம் பக்கத்து வீடுகளில் சென்று விளையாடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் விளையாடச் சென்ற சிறுமி அழுதுகொண்டே வீடு திரும்பியுள்ளார். 


Advertisement

image

 

அதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், சிறுமியிடம் விசாரித்தபோது பக்கத்து வீட்டில் வசிக்கும் லாரி டிரைவர் கதிர்வேல் சாமி என்பவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 


Advertisement

image

 சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் குழந்தையை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து, பாலியல் துன்புறுத்தல் செய்த கதிர்வேல் சாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்

Advertisement:

Advertisement

Advertisement

Advertisement