’க்ரைம் த்ரில்லர்’ கதையில் நடிக்கும் ஜி.வி பிரகாஷ்!

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

அறிமுக இயக்குநர் அகிலன் இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் படத்தில் ஜி.வி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி இருக்கிறது.


Advertisement

வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி பிரகாஷ். கிரீடம், பொல்லாதவன், அங்காடித் தெரு, ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்தவர் குசேலன், நான் ராஜாவாகப் போகிறேன். தலைவா என சில படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்தார்.

image


Advertisement

இவரது துறையைச் சேர்ந்த விஜய் ஆண்டனி கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ‘நான்’ படத்தில் ஹீரோவாகி வெற்றியைக் கொடுத்த நம்பிக்கையில்,  கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான  டார்லிங் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஜி.வி பிரகாஷ்.

image

அதனைத்தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இன்னும் பல்வேறு படங்கள் இவரது நடிப்பில் வெளிவரத் தயாராக இருக்கின்றன. சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படமும் இவரது இசையில் வெளியாகவுள்ளது.


Advertisement

image

இந்நிலையில், ஜி.வி பிரகாஷ் தனது புதிய பட அறிவிப்பை இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறார். அறிமுக இயக்குநர் அகிலன் இயக்க நவிரா சினிமாஸ் இப்படத்தை தயாரிக்கிறது. க்ரைம் த்ரில்லராக உருவாகும் இப்படத்தின் பூஜை இன்று நடந்துள்ளது. சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது. வரும் டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

loading...

Advertisement

Advertisement

Advertisement