இந்தியாவையும் இந்திய மக்களையும் காக்கும் முப்படைகளில் விமானப்படை முக்கியமானது. ஒரு நாட்டின் வளர்ச்சியையும் வீரத்தையும் உயர்த்திக் காட்டுவது போர் விமானங்களே.
இந்திய விமானப்படை 1932 ஆம் ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி இந்தியாவை ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. உலகிலேயே நான்காவது மிகப்பெரிய விமானப்படையை கொண்ட நம் இந்தியாவில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பணிபுரிகிறார்கள். ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர் விமானங்களும், 1700 பயன்பாட்டு விமானங்களும் உள்ளன.
இதனை சிறப்பிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்திய விமானப்பட தினம் அக்டோபர் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்திய விமானப்படையின் 88-வது ஆண்டுதினம். இதனையொட்டி விமானங்களின் சாகசங்கள் விண்ணை பிளந்து இந்தியாவின் பெருமையை உலகையே உற்றுநோக்க வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு இந்திய விமானப்படைக்கு தனது ட்விட்டர் பக்கத்தில், ”இந்திய விமானப்படை தினத்தில் நம்முடைய துணிச்சலான ஐ.ஏ.எஃப் பணியாளர்களுக்கு வணக்கம்.
Saluting our brave IAF Personnel on the occasion of Indian Air Force Day. We owe our peace and freedom to all the soldiers safeguarding our national security. ?? #IndianAirForceDay — Mahesh Babu (@urstrulyMahesh) October 8, 2020
எங்கள் அமைதி மற்றும் சுதந்திரத்தையும் நாட்டின் தேசிய பாதுகாப்பையும் பாதுகாக்கும் அனைத்து வீரர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்” என்று கையெடுத்து கும்பிட்டு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
Loading More post
பட்ஜெட் 2021: வருமானவரி செலுத்துவோருக்கு ரூ.80,000 வரை சலுகை கிடைக்க வாய்ப்பு!
சீர்காழி: 2 பேரை கொன்று 17 கிலோ நகை கொள்ள...4 மணி நேரத்தில் வளைத்த போலீஸ்... நடந்தது என்ன?
டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது எந்த கொடி?
தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்?
பட்ஜெட் 2021: வங்கிகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை முடுக்கிவிட திட்டம்?