சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
துபாயில் நடைபெறும் இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. வார்னர் தலைமையிலான ஹைதராபாத் அணி விளையாடிய 5 போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. கே.எல். ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணி விளையாடிய 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டுள்ளது.
இவ்விரு அணிகளும் இதுவரை 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஹைதராபாத் அணி 10 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக இந்த இரு அணிகள் மோதியப் போட்டி 2019 இல் நடைபெற்றது. அப்போது ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்து 213 ரன்களை குவித்தது. அந்தப் போட்டியில் டேவிட் வார்னர் 82 ரன்களை குவித்தார்.
அடுத்து விளையாடிய பஞ்சாப் அணியால் 167 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. கே எல் ராகுல் அதிகப்பட்சமாக 79 ரன்களை எடுத்தார். இவ்விரு அணிகளும் அமீரகத்தில் 2014 ஆம் ஆண்டு விளையாடியது, ஷார்ஜாவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பஞ்சாப் அணி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்த இரு அணிகளும் மோதியப் போட்டிகளில் ஹைதராபாதுக்கு சிறந்த பேட்ஸ்மேனாக டேவிட் வார்னர் இருந்து வருகிறார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் அவர் 574 ரன்களை எடுத்துள்ளார். பஞ்சாப் அணியில் மனன் வோரா 195 ரன்களை சேர்த்துள்ளார். பந்துவீச்சை பொறுத்தவரை ஹைதராபாத்தின் புவனேஷ்வர் குமார் 18 விக்கெட்டுகளும், பஞ்சாபின் சந்தீப் சர்மா 15 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளனர். அதிகபட்ச ரன்னாக ஹைதரபாத் 212 ரன்களும் பஞ்சாப் அணி 211 ரன்களும் பதிவு செய்திருக்கிறது.
இவை எல்லாம் கடந்த கால சாதனைகள். இன்றையப் போட்டியில் ஹைதராபாத்தின் பலம் பேட்டிங். டேவிட் வார்னர், ஜானி பார்ஸ்டோ, ப்ரியம் கார்க், கேன் வில்லியம்சன் ஆகியோர் அசுர பலத்துடன் இருக்கிறார்கள். பவுலிங்கில் புவனேஷ்வர் குமார், மிட்சல் மார்ஷ் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர். ஆனால் ஆப்கான் சுழற்பந்துவீச்சாளர் முஜீப்புர் ரஹ்மானை இப்போது வரை ஏன் அணியில் சேர்க்கவில்லை என்பது புரியாத புதிராக இருக்கிறது.
பஞ்சாபை பொறுத்தவரை கே எல் ராகுலும், மயாங்க் அகர்வாலை மட்டுமே அணி பெரிதாக நம்பியிருக்கிறது. இவர்களை தவிர்த்து நடுவரிசை பேட்ஸ்மேன்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பவுலிங்கிலும் முகமது ஷமி, காட்ரல், ரவி பிஷ்னோய் ஆகியோரை மட்டுமே நம்பியிருக்கிறது. பஞ்சாபை பொறுத்தவரை பேட்ஸ்மேன்கள் விளாசினால்தான் வெற்றி வசமாகும் சூழ்நிலை இருக்கிறது.
Loading More post
"சிஎஸ்கே அணியால் ஆட்டத்திறன் மேம்பட்டது!" - 'சுட்டிக் குழந்தை' சாம் கரன்
தெலங்கானா ஆளுநர் தமிழிசைக்கு உலகின் தலைசிறந்த 20 பெண்மணிகளுக்கான விருது
புதுச்சேரி: முதல்வர் பதவியை கேட்கும் திமுக - கலக்கத்தில் காங்கிரஸ்
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து - 9 பேர் உயிரிழப்பு
எங்கு நடக்கிறது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி? - கங்குலி தகவல்
டி.டி.வி.தினகரனுடன் கூட்டணி அமைத்த ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி: பறக்குமா ஓவைசியின் பட்டம்?
கேரளாவில் எடுபடாத 'வசப்படுத்தும்' உத்தி... பிரபலங்களால் மாற்றம் காணுமா பாஜக? - ஒரு பார்வை
தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கும் சாமானியர்கள்: பணம் எடுத்து செல்வோர் கவனத்துக்கு!
'பெங்காலி பெருமை' முதல் கள வியூகம் வரை... மம்தா நம்பிக்கையின் பின்புலம்!