வெளிநாடுகளிலிருந்து திரும்பும் தமிழர்களுக்கு கொரோனா முன் பரிசோதனை விலக்கு வேண்டும்: சீமான்

india-s-first-5g-video-call-demoed-by-ericsson-qualcomm-at-imc

வெளிநாடுகளிலிருந்து திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு கொரோனா பரிசோதனைகளிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.


Advertisement

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா சூழலில் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் விமானப் பயணச்சீட்டு வாங்குவதற்குக்கூட இயலாத நிலையில் தன்மானத்தை அடகுவைத்து மற்றவர்களிடம் கையேந்தியும் நண்பர்களிடம் உதவிகளைப்பெற்றும் விமானக்கட்டணத்தை செலுத்தி தாயகம் திரும்ப முயல்கின்றார்கள்.

image


Advertisement

இந்திய விமான போக்குவரத்து அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘இந்தியாவுக்கு திரும்பும் பயணிகள் தாங்கள் புறப்படும் முன்பே கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயமில்லை. தாயகம் திரும்பியது அவர்கள் இறங்கும் விமான நிலையங்களிலேயே அறிகுறிகளுக்கு ஏற்ப பரிசோதனை செய்து, அந்த முடிவுகளுக்கேற்ப சுய தனிமைப்படுத்திக்கொள்வதோ அல்லது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்வதோ அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்துக்கு வரும் பயணிகளுக்கு மட்டும் பயணத்திற்கு முன்பே கொரோனா முடிவு என்ற நடைமுறை முற்றிலும் முரணாகவும் தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு புதிய சிக்கலையும் ஏற்படுத்தி அலைகழிக்கும் போக்காக அமைந்துள்ளது.

 image

கட்டணத்திற்கே வழியின்றி அல்லல் படுபவர்களால் வெளிநாடுகளில் பெருங்கட்டணம் செலுத்தி கொரோனா பரிசோதனைகளை எப்படி செய்துகொள்ளமுடியும்? எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு சீரிய கவனம் எடுத்து மத்திய அரசிடம் உடனடியாக மற்றமாநிலங்களைப்போல தமிழகத்துக்கு வர விரும்பும் தமிழகர்களுக்கும்  கொரோனா பரிசோதனை முன்கூட்டியே செய்யத்தேவையில்லை என்று அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று சீமான் கோரிக்கை வைத்துள்ளார்


Advertisement

 

loading...

Advertisement

Advertisement

Advertisement